- Ads -
Home சற்றுமுன் கவர்னரை சந்தித்த அண்ணாமலை…

கவர்னரை சந்தித்த அண்ணாமலை…

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களாக மின்வாரியத்தில் முறைகேடு நடந்துள்ளதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். பிஜிஆர் நிறுவனத்திற்கு தமிழக மின்வாரியம் முறைகேடாக ஒப்பந்தம் ஒதுக்கியதாக அவர் குறிப்பிட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த நிலையில்,கவர்னர்ஆர்.என்.ரவியை, அண்ணாமலை சந்தித்தார். இச்சந்திப்பின்போது, மின்வாரிய முறைகேடு தொடர்பாக அண்ணாமலை மனு அளித்ததாக கூறப்படுகிறது.

தமிழக மின்சார வாரியம் 4,442 கோடி ரூபாய் மதிப்பிலான மின் திட்ட ஒப்பந்தத்தை அனைத்து விதிகளையும் மீறி நஷ்டத்தில் இயங்கும் பி.ஜி.ஆர் நிறுவனத்திற்கு   வழங்கப்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டிருந்தார். மேலும் இந்த நிறுவனம்  திமுகவுக்கு வேண்டிய நிறுவனம் எனவும் குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,  பி.ஜி.ஆர் நிறுவனத்தில் கோபாலபுரம் நிதி முதலீடு செய்துள்ளது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டை அவர் சொன்னார் என்பதை 24 மணி நேரத்துக்குள் அண்ணாமலை  தெரிவிக்க வேண்டும் என கூறினார். இல்லையென்றால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளித்த அண்ணாமலை, பிஜிஆர் நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கியது தொடர்பாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் பிஜிஆர் ஒப்பந்த முறைகேடு குறித்து தமிழக முதல்வருக்கும், செபிக்கும் கடிதம் அனுப்ப இருப்பதாக தெரிவித்தார். பிஜிஆர் நிறுவனத்தை கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். வாரிய முறைகேடு குற்றச்சாட்டு குறித்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் செபி நிறுவனத்திற்கு கடிதம் எழுத இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்து அண்ணாமலை புகார் அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்துள்ளது அரசியல் களத்தில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamil News large 2988320

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version