- Ads -
Home சற்றுமுன் அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்வி பாடவேளை கட்டாயம்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்வி பாடவேளை கட்டாயம்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

school 2

அனைத்துப் பள்ளிகளிலும் உடற்கல்விக்குப் பாடவேளை ஒதுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 6,7,8 மற்றும் 9 ஆகிய வகுப்புகளுக்கு அனைத்துப் பள்ளிகளிலும் உடற்கல்விக்கு பாடவேளை ஒதுக்க பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அனைத்துப் பள்ளிகளிலும் 6,7,8 மற்றும் 9 ஆகிய வகுப்புகளுக்கு மட்டும் உடற்கல்வி பாடவேளையை அமல்படுத்த வேண்டும்.

10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பினர் பொதுத்தேர்வுக்கு தயாராவதால், அவர்களுக்கு உடற்கல்வி பாடவேளை கிடையாது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version