- Ads -
Home சற்றுமுன் அஜித், விஜய்யின் காஸ்ட்யூம் டிசைனர் உயிரிழப்பு!

அஜித், விஜய்யின் காஸ்ட்யூம் டிசைனர் உயிரிழப்பு!

ajith vijay

விஜய் மற்றும் அஜித்துக்கு படங்களில் காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றிய கே.கோவிந்தராஜ் வயது மூப்பு காரணமாக சென்னையில் மரணமடைந்தார்

கோவிந்தராஜிடம் சிறந்த கலர் சென்ஸ் மற்றும் ட்ரெண்டான வடிவமைப்பு ஸ்டைல் இருந்ததாக பல திரையுலகினர் குறிப்பிட்டுள்ளனர்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பணியாற்றிய அவர் நடிகர் விஜய் நடித்த ‘பூவே உனக்காக’ மற்றும் ‘காதலுக்கு மரியாதை’, நடிகர் அஜித் மற்றும் பார்த்திபனின் ‘நீ வருவாய் என’ சரத் குமாரின் ‘சூர்யவம்சம்’ உள்ளிட்ட பல படங்களுக்கு ஆடைகளை வடிவமைத்துள்ளார்.

நடிகர் ராமராஜன், நடிகைகள் கனகா, சங்கீதா போன்ற பல பிரபலங்களுக்கு கோவிந்தராஜ் தனிப்பட்ட ஆடை வடிவமைப்பாளராகவும் இருந்தார்.

அவர் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், விக்ரமன் மற்றும் ராஜகுமாரன் ஆகியோருடன் இணைந்து அவர்களது பல திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் 82 வயதாகும் கோவிந்தராஜன் வயது மூப்பு காரணமாக நேற்று சென்னையில் காலமானார். அவரின் இறுதிச் சடங்கு சென்னை வளசரவாக்கத்தில் நேற்று மாலை நடைப்பெற்றது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version