- Ads -
Home சற்றுமுன் US அடுத்து UK..! கிண்டர் சர்ப்ரைஸ் குறித்து FSA எச்சரிக்கை!

US அடுத்து UK..! கிண்டர் சர்ப்ரைஸ் குறித்து FSA எச்சரிக்கை!

Kinder Surprise eggs recalled in UK over salmonella fears

kinderjoy

உலகம் முழுதும் குழந்தைகள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது கிண்டர் தயாரிப்புகள். இவற்றைத் தயாரிக்கும் நிறுவனமான ஃபெரெரோ, தனது தயாரிப்புகளில் ஒன்று உடல் நலனுக்கு உகந்ததாக இல்லை என்று வந்த புகார்களை அடுத்து, சந்தையில் இருந்து அதைத் திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாம்!

லண்டன் உணவு பாதுகாப்பு ஏஜென்சி (FSA) சில கிண்டர் பிராண்ட் தயாரிப்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு நுகர்வோருக்கு அறிவுறுத்தியுள்ளது என்றும், கிண்டரின் உணவுப் பொருட்களுக்கும் சால்மோனெல்லா தொற்று பரவுவதற்கும் இடையே தொடர்பு இருப்பதாக FSA சந்தேகம் வெளியிட்டுள்ளதாகவும் தகவல் பரவியது.

UKHSA மற்றும் ஐரோப்பாவில் உள்ள வேறு சில சுகாதார நிறுவனங்களின் விசாரணையில், நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கும் இங்கிலாந்தில் பரவும் சால்மோனெல்லா தொற்றுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக சந்தேகம் வெளியிட்டுள்ளது. இதை அடுத்து, முன்னெச்சரிக்கையாக, ஃபெரெரோ நிறுவனம் குறிப்பிட்ட தயாரிப்பை திரும்பப் பெற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளதாகவும், இது குறித்து விசாரணை தொடங்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளதாம். எனினும், மற்ற கிண்டர் தயாரிப்புகளில் பிரச்னை எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சால்மோனெல்லா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால், Kinder Surprise தயாரிப்பின் சில பேட்ச்களை திரும்பப் பெறுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளதாம். கிண்டர் சர்ப்ரைஸின் 20 கிராம் பாக்கெட்களில், Best Before 11 ஜூலை 2022 மற்றும் Best Before 7 அக்டோபர் 2022 என குறிப்பிடப்பட்ட பாக்கெட்டுகள் மட்டுமே திரும்பப் பெறப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளதாம்.

தயாரிப்பு குறித்த அறிவிப்புகள் பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் சில்லறை விற்பனைக் கடைகளில் வைக்கப்படும் என்று ஃபெரெரோ நிறுவனம் தெரிவித்துள்ளது என்றும், அவை ஏன் திரும்பப் பெறப்படுகின்றன என்பதற்கான விளக்கமும் அந்த அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

சால்மோனெல்லா தொற்று பச்சை இறைச்சி, காய்ச்சாத பால், முட்டை, மாட்டிறைச்சி அல்லது அதிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் மூலம் பரவும். மேலும் அசுத்த நீர் அல்லது உணவை உட்கொள்வதன் மூலமும் சால்மோனெல்லா பாக்டீரியாவால் பாதிக்கப்படலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்த பாக்டீரியாக்கள் இளம் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு மிகவும் ஆபத்தானவை; அதன் தொற்று பொதுவாக 4 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும். வயிற்று வலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், குளிர், தலைவலி, மலத்தில் இரத்தம் ஆகியவை இந்த நோய்க்கான அறிகுறிகள் என்றும் கூறப்படுகிறது.

1 COMMENT

  1. The News is wrong please remove it. Kinder Surprise manufactured in Belgium, as Kinder Surprise is not sold in India. Ferrero India manufactures Kinder Joy in its plant at Baramati (Pune), which is sold across the country, complying with the local applicable regulations.

    News should be about Kinder Surprise not Kinder Joy as there is no issue with the Kinder Joy in India.

    PR Team
    Ferrero India

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version