- Ads -
Home சற்றுமுன் தவறான செய்திகளை பரப்பியதால் 16 யூடியூப் சேனல்கள் முடக்கம்: மத்திய அரசு நடவடிக்கை!

தவறான செய்திகளை பரப்பியதால் 16 யூடியூப் சேனல்கள் முடக்கம்: மத்திய அரசு நடவடிக்கை!

05 May27 youtube
05 May27 youtube e1539757713461

தவறான தகவல்களை பரப்பியதாக 16 யூடியூப் செய்தி சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் “இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள் மற்றும் பொது ஒழுங்கு தொடர்பான தவறான தகவல்களை பரப்பியதற்காக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் 16 யூடியூப் செய்தி சேனல்களை முடக்கியுள்ளது.

தடைசெய்யப்பட்ட சேனல்களில் 6 சேனல்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவை என்றும், 10 சேனல்கள் இந்தியாவைச் சார்ந்தவை” என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், ” தடைசெய்யப் பட்டுள்ள இந்த யூடியூப் சேனல்கள் இந்தியாவில் பீதியை உருவாக்கவும், மத நல்லிணக்கத்தைத் சீர்குலைக்கவும், பொது ஒழுங்கை சிதைக்கவும் தவறான, சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்பி வருகின்றன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது முடக்கப்பட்டுள்ள யூடியூப் செய்தி சேனல்களின் பார்வையாளர்களின் எண்ணிக்கை 68 கோடிக்கும் அதிகம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுபோல ஏற்கனவே பலமுறை தவறான தகவல்களை பரப்பியதாக நூற்றுக்கணக்கான யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version