- Ads -
Home சற்றுமுன் எனக்கென்று ஒரு பெயரும், சாதனையும் வேண்டும்: வேதாந்த் மாதவன்!

எனக்கென்று ஒரு பெயரும், சாதனையும் வேண்டும்: வேதாந்த் மாதவன்!

madhavan vedhanth

நடிகர் மாதவனின் மகன் வேதாந்த்
அண்மையில் டென்மார்க் ஓபன் நீச்சல் போட்டியில் இரண்டு பதக்கங்கள் வென்றிருந்தார்.

16 வயதான வேதாந்த், தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்று தேசத்திற்கே பெருமை தேடி தந்தார். பள்ளியில் நீச்சல் பழகிய அவருக்கு அந்த விளையாட்டின் மீது ஈர்ப்பு வந்துள்ளது.

தொடர்ந்து அதில் தொழில்முறை சார்ந்த பயிற்சிகளை மேற்கொண்டு, நாட்டுக்காக பதக்கம் வென்று கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், அவர் பேட்டி ஒன்றில் நான் நடிகர் மாதவனின் மகனாக மட்டுமே இருக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.

“நான் என் அப்பாவின் நிழலில் வாழ விரும்பவில்லை. நான் அவரது மகனாக மட்டுமே இருக்க விரும்பவில்லை. எனக்கென ஒரு பெயர் வாங்க விரும்புகிறேன். எனது குடும்பம் எனக்கு தொடர்ச்சியான ஆதரவு வழங்கி வருகிறது. எனக்காக எனது பெற்றோர்கள் துபாய்க்கு குடிபெயர்ந்து வந்துள்ளனர்” என தெரிவித்துள்ளார் வேதாந்த்.

கடந்த டிசம்பரில் மாதவனின் குடும்பம் துபாய்க்கு குடிபெயர்ந்தது. மகனின் நீச்சல் பயிற்சிக்காக இந்த இடப்பெயர்வை மாதவனும் அவரது மனைவியும் மேற்கொண்டுள்ளனர்.

மும்பையில் பெரிய நீச்சல் குளங்கள் கொரோனா காரணமாக மூடப்பட்டுள்ளது. அதனால் வேதாந்த் பயிற்சி மேற்கொள்வதற்கு ஏதுவாக துபாயில் உள்ளோம். அவர் ஒலிம்பிக்கிற்கு தன்னை தயார் செய்து கொண்டு வருகிறார். நானும் எனது மனைவியும் அவருடன் இருக்கிறோம்” என மாதவன் சொல்லியிருந்தார்.

அண்மையில் தன் மகன் பதக்கம் வென்றதை கூட பெருமையுடன் பகிர்ந்திருந்தார் மாதவன்.

பெங்களூருவில் நடைபெற்ற தேசிய ஜூனியர் நீர் சாகச சாம்பியன்ஷிப் போட்டியில் மகாராஷ்டிராவுக்காக வேதாந்த், ஏழு பதக்கங்களை வென்றிருந்தார்.

12 வயதில் தாய்லாந்தில் நடந்த சர்வதேச நீச்சல் போட்டியில் வெற்றி பெற்றவர் அவர். ஜூனியர் தேசிய நீச்சல் போட்டியில், மூன்று தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார்.

ஆசிய ஏஜ் குரூப் நீச்சல் சாம்பியன்ஷிப்பில் வேதாந்த் இந்தியாவுக்காக வெள்ளி வென்றதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ராக்கெட்ரி திரைப்படம் வெளியாக உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version