- Ads -
Home சற்றுமுன் பைக்கை உருட்டி விட்ட பந்து!

பைக்கை உருட்டி விட்ட பந்து!

ball

சாலையில் ஒருவர் செய்த விளையாட்டு செயல் இருவரின் உடல்களை பதம் பார்த்து இருக்கிறது. இந்த வீடியோவின் மூலம் சாலையில் நாம் எவ்வாறு கவனமுடன் செல்ல வேண்டும், நம்முடைய கவனக்குறைவால் நமக்கு ஆபத்து ஏற்படுவதோடு, நாமல் பிறருக்கும் ஆபத்து நேரும் என்பதை உணர முடிகிறது.

ட்விட்டரில் வைரல் போஸ்ட்ஸ் என்கிற கணக்கு பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டு இருக்கிறது. அந்த வீடியோவில், இரவு நேரத்தில் ஆல்நடமாட்டம் இல்லாத சாலை ஒன்றில் ஒருவர் கூடைப்பந்தை வைத்து கையால் தட்டிக்கொண்டே சென்று கொண்டு இருக்கின்றார்.

அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக அவர் கையில் வைத்து விளையாடி கொண்டிருந்த பந்து சற்று விலகி சாலையின் நடுவே உருண்டு ஓடி விடுகிறது.

இவர் அந்த பந்தை எடுக்க முற்படும்போது அந்த வழியே ஸ்கூட்டி ஒட்டிக்கொண்டு வந்த இருவர் பந்தின் மீது வண்டியை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர்.

கீழே விழுந்த இருவரில் ஒருவர் எழுந்துவிட, மற்றொருவர் எழுவதற்கு முயற்சிப்பதோடு இந்த வீடியோ நிறைவு பெறுகிறது.

சாலையில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சிகரமாகவும், அதே சமயம் நகைச்சுவையை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

இணையத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவானது சில மணி நேரங்களில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும், பல லைக்குகளை பெற்றுள்ளது.

இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் பலரும் அதிர்ச்சியடையும் எமோஜிக்களையும், சிரிப்பு எமோஜிக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version