- Ads -
Home சற்றுமுன் ட்வீட்டரில் என்னென்ன மாற்றங்கள்.‌. 5 ஆண்டு கால கனவு..!

ட்வீட்டரில் என்னென்ன மாற்றங்கள்.‌. 5 ஆண்டு கால கனவு..!

Elan musk

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கடந்த 2017-ல் ட்விட்டரின் விலையை ட்வீட் மூலம் கேட்டுள்ளார் மஸ்க். தற்போது அந்த ட்வீட் வைரலாகி வருகிறது.

உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆன மஸ்க், ட்விட்டர் தளத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக அது தொடர்பான பேச்சுவார்த்தையில் இரண்டு தரப்பும் ஈடுபட்டது.

கடந்த மார்ச் மாதம் முதலே ட்விட்டர் குறித்து பேசி வந்தார் மஸ்க். முதலில் ஜனநாயக செயல்பாட்டுக்கு பேச்சு சுதந்திரம் தேவை என சொல்லியிருந்தார். அதோடு ட்விட்டர் இந்த விஷயத்தில் எப்படி என கேட்டிருந்தார் மஸ்க்.

தொடர்ந்து மஸ்க் சொந்தமாக சமூக வலைதளத்தை நிறுவ உள்ளாரா என கேட்டிருந்தனர் பயனர்கள். சிலர் பேசாமல் ட்விட்டரை வாங்கி விடுங்கள் என தெரிவித்தனர்.

தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தில் 9.2 சதவீத பங்குகளை வாங்கியுள்ளதாக மஸ்க் தெரிவித்தார். அதையடுத்து ட்விட்டருக்கு இதுதான் எனது விலை என பகிரங்கமாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார் மஸ்க். இப்போது ட்விட்டர் தளம் அவரது வசமாகி உள்ளது.

இந்நிலையில், அவரது பழைய ட்வீட் ஒன்று வைரலாகி வருகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கடந்த 2017-ல் அந்த ட்வீட்டை பதிவு செய்துள்ளார் மஸ்க். ‘ஐ லவ் ட்விட்டர்’ என அதில் தெரிவித்துள்ளார் அவர்.

அதற்கு பயனர் ஒருவர், ‘அப்படியென்றால் நீங்கள் அதனை வாங்கி விடுங்கள்’ என ரிப்ளை கொடுத்துள்ளார். ‘அதன் விலை என்ன?’ என கேட்டுள்ளார் மஸ்க். இந்த ட்வீட் உரையாடல் தான் இப்போது வைரலாகி வருகிறது.

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கி உள்ள நிலையில் அதில் பல அதிரடி மாற்றங்கள் வர போவதாக தகவல்கள் வருகின்றன.

44 பில்லியன் டாலருக்கு ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ளார். ட்விட்டர் போர்ட் உறுப்பினர்கள் – எலான் மஸ்க் இடையே நடந்த ஆலோசனையில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

டிவிட்டர் நிறுவனத்தின் மொத்த பங்கையும், தலா ஒரு பங்கு 54.20 டாலர் என்ற விலைக்கு வாங்கி உள்ளார் எலான் மஸ்க்.

கண்டிப்பாக ட்விட்டர் நிறுவனத்தில் கருத்துரிமை அதிகரிக்கும். தற்போது வரை அமெரிக்காவில் வலதுசாரிகள் ட்விட்டரில் பெரிதாக சுதந்திரமாக கருத்து தெரிவிக்க முடிவது இல்லை.

காமெடிகள் கூட சர்ச்சை ஆகும் என்ற காரணத்தால் கடுமையாக கண்காணிக்கப்படுகிறது. பல நாடுகளில் அரசுகளின் கோரிக்கையால் மக்கள் சுதந்திரமாக எதுவும் பேச முடிவது இல்லை. ட்விட்டரில் கருத்துரிமை அதிகம் இருக்க வேண்டும் என்று மஸ்க் ஏற்கனவே தெரிவித்து இருக்கிறார். அதனால் கண்டிப்பாக இந்த மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதாவது ஏதாவது ஒரு போஸ்டல் கணக்கு நீக்கப்படுவது. அல்லது அரசின் கோரிக்கையால் போஸ்ட் நீக்கப்படுவது போன்றவை வெகுவாக தடுக்கப்படும். அதே சமயம் சட்ட விதிகளை மீறும் போஸ்ட் அனுமதிக்கப்படாது என்று கூறுகிறார்கள்.

ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கிய காரணத்தால் ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட டிரம்ப் போன்ற அமெரிக்க வலதுசாரி தலைவர்கள், மற்ற நாடுகளின் இடதுசாரி தலைவர்கள் மீண்டும் ட்விட்டரில் அனுமதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

அதேபோல் ட்விட்டரின் கோடிங் gethub பக்கத்தில் வெளிப்படையாக போடப்படும். இதன் மூலம் அந்த கோடிங்கில் தவறு இருக்கிறதா.. என்ன மாற்றலாம் என்று மக்கள் சொல்ல முடியும்.

அதேபோல் இந்த கோடிங் மூலம் மற்றவர்களின் ட்விட் உங்களுக்கு அதிகம் புரொமோஷன் செய்யப்படுகிறதா, மற்றவர்களின் கணக்குகள், அல்லது கொள்கைகள் அதிகம் டிரெண்ட் கண்டுபிடிக்க முடியும். ட்விட்டரின் வெளிப்படைத்தன்மை இதனால் கண்டிப்பாக அதிகரிக்கும்.

ட்விட்டரில் எடிட் பட்டன் கொண்டு வர வேண்டும் என்றும் மஸ்க் முயன்று வருகிறார். ஆனால் இதன் மூலம் நீங்கள் எடிட் செய்யும் போஸ்டுகளுக்கு நிறைய கட்டுப்பாடுகள் இருக்கும்.

twitter

உதாரணமாக நீங்கள் எடிட் செய்த போஸ்டிங் ரீ டிவிட் எண்ணிக்கை ஜீரோவாக மாற்றி அமைக்கப்படும். அதேபோல் எடிட் ஹிஸ்டரி இருக்கும்.

இதனால் இன்று ஒன்று சொல்லிவிட்டு அதை நாளை மாற்ற முடியாது. அதேபோல் எடிட் செய்ய கால அவகாசம் கொடுக்கப்படும்.

இது போக மஸ்க் பல நாட்களாக எச்சரித்து வரும் பாட்ஸ் நீக்கம் விரைவில் நடக்கலாம். அதாவது பொய்யான கணக்குகள் இருப்பதை ட்விட்டர் இனி நீக்கும் வாய்ப்புகள் உள்ளன.

இதனால் பொய்யான டிரெண்டுகள், அரசியல் கட்சிக்கு ஆதரவான பொய்யான டிரெண்ட்கள் குறையும். பல நாடுகளில் ட்விட்டரை நம்பி அரசியல் கருத்துக்களை பரப்பும் கட்சிகள், சினிமா நடிகர்களின் பொய்யான bots கணக்குகள் முடக்கப்படும். இதனால் அரசியல் கட்சிகள் பொய்யான டிரெண்டுகளை செய்து இனி ஆட முடியாது.

இதன் காரணமாக இன்னொரு பக்கம் பொய்யான கிரிப்டோகரன்சி மோசடிகளும் தடுக்கப்படும். ட்விட்டர் பக்கத்தில் கிரிப்டோகரன்சி மோசடிகள் அதிகம் ஆகியுள்ளது.

அதோடு எலான் மஸ்க் கணக்கு தொடங்கி பலரின் கணக்குகள் இது தொடர்பான பிரச்சாரத்திற்காக ஹேக் செய்யப்பட்டது. அதை கட்டுப்படுத்தும் வகையில் ட்விட்டரில் நிறைய மாற்றங்கள் வரும்.

இது இல்லாமல் விளம்பரம் இல்லாமல் ட்விட்டர் சேவையை பயன்படுத்த ட்விட்டர் புதிதாக சாப்ஸ்க்ரிப்ஷன் மாடலை கொண்டு வரும். மேலும் ஒரு ட்விட் கூட போடாமல் போர்ட் மெம்பர் குழுவில் இருக்கும் நபர்கள் நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

புதிது போர்ட் உருவாக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. அதேபோல், டவுன் வோட் என்ற வசதி கொண்டு வரப்படலாம். சிஇஓ பராக் அகர்வால் நீக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளன. எல்லாம் போக ட்விட்டர் லோகோ மாறினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கிறார்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version