- Ads -
Home சற்றுமுன் தஞ்சை களிமேடு தேர்விபத்தில் பலியானோர்க்கு பிரதமர் இரங்கல்-நிவாரணம் அறிவிப்பு..

தஞ்சை களிமேடு தேர்விபத்தில் பலியானோர்க்கு பிரதமர் இரங்கல்-நிவாரணம் அறிவிப்பு..

தஞ்சை அருகே நடந்த தேர்த்திருவிழா விபத்தில் பலியான 11 பேர் காயமடைந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன் று இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவித்துள்ளார்.

தஞ்சை அருகே களிமேடு பகுதியில் தேர் பவனியின் போது மின்சாரம் பாய்ந்த விபத்தில் தேரை இழுத்த 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்

இந்த நிகழ்வின் போது தண்ணீர் காரணமாக 50க்கும் மேற்பட்டோர் தேரை விட்டு தள்ளி நின்றதால் மேலும் பலர் உயிர் தப்பி உள்ளனர். காயமடைந்த 10க்கும் மேற்பட்டோரில் 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இந்த நிலையில் தஞ்சை தேர்பவனி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தேர்பவனி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணமும்,காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிதி வழங்கவும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சை அருகே தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரையும் காயமடைந்தவர்களையும் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்க உள்ளார்.இந்த நிலையில் விபத்துக்கு உள்ளான தேரையும் அப்பகுதியையும் தமிழக காவல்துறை மத்திய மண்டல தலைவர் வி.பாலகிருஷ்ணன் தஞ்சாவூர் சரக காவல் துணைத்தலைவர் கயல்விழி பார்வையிட்டு ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

tanj1

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version