- Ads -
Home சற்றுமுன் யார் மேல் கோபமோ.. போட்டோகிராபரை முறைத்த மணப்பெண்..!

யார் மேல் கோபமோ.. போட்டோகிராபரை முறைத்த மணப்பெண்..!

marriage 2

சில திருமணங்களில் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைக்கும் எதிர்பாராத நிகழ்வுகளும் ஏற்படும். திருமணமே நின்று போவது என்ற அளவுக்கு கூட பல சம்பவங்கள் நடந்துள்ளது.

திருமணங்களில் நடக்கும் குறும்புகள், கேளிக்கைகளால் அவை கொஞ்சம் வைரலாகி வருகின்றன. சில இடங்களில் தற்செயலாக நடந்தாலும், விளம்பரத்துக்காக செய்தாலும் திருமண விழாக்கள் செய்திகளில் இடம் பெறுகின்றன.

சில திருமண வீடியோக்கள் வேடிக்கையாக இருந்தால், மற்றவை ஆச்சரியமாக இருக்கும். இந்த வகையைச் சேர்ந்த ஒரு திருமண வீடியோ வைரலாகி வருகிறது.

திருமணத்தின் போது நடைபெறும் எவ்வளவு பெரிய வேடிக்கையான சம்பவங்களையும் மணமக்கள் மகிழ்ச்சியாக எடுத்து கொள்வார்கள்.

அதற்கு காரணம் மணமக்கள் இருவரும் சம்மதத்துடன் நடைபெறுவதால் திருமணத்தில் நடைபெறும் அனைத்து சம்பவங்களையும் அவர்கள் ரசித்து அதனை ஏற்றுக் கொள்ளவார்கள்.

ஆனால் அதுவே அந்த திருமணத்தில் மணமக்களுக்கு விருப்பம் இல்லாமல் பெற்றோர்களால் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தால் சின்ன விஷயங்களை கூட அவர்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ளவார்கள்.

அப்படி தான் இந்த வீடியோவில் மணப்பெண் மணமகனுக்கு மாலை அணிவிக்கிறார். அப்போது அங்கிருக்கும் போட்டோகிராபர் மேடம் கொஞ்ச பாருங்க, கொஞ்சம் சிரிங்க என்கிறார்.

ஆனால் திருமணத்தில் விருப்பம் இல்லாதது போன்று இருக்கும் மணமகள் அந்த பெண் போட்டோகிராபரை பார்த்து முறைத்து கொண்டே இருக்கிறார். அவரது முகத்தில் இருக்கும் ஆக்ரோஷத்தை பார்த்து போட்டோகிராபருக்கு மட்டுமில்லை அங்கிருக்கும் மணமகளின் உறவினர்களுக்கு சற்று அதிர்ச்சியாக தான் இருந்திருக்கும்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் உங்களுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லையா? போட்டோகிராபர் உங்களிடம் ஏதாவது விஷம் செய்தாரா? என்று கமெண்ட்களை குவித்து வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version