- Ads -
Home சற்றுமுன் காரையாறு தாமிரவருணியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு..

காரையாறு தாமிரவருணியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு..

திருநெல்வேலி மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு வந்த 2 சிறுவர்கள் இன்று தாமிரவருணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை காரையாறு வனப்பகுதியில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஜூலை 26 செவ்வாய்கிழமை முதல் ஜூலை 30 வரை ஆடி அமாவாசை திருவிழா நடைபெறுகிறது. இதற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து குடில் அமைத்து விரதமிருந்து வழிபடுவர். இந்நிலையில் மதுரை, திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூரிலிருந்து குடும்பத்துடன் வந்திருந்த சரவணன் மகன் கார்த்திக் (8), விஷ்ணுகுமார் மகன்
ஹரிகுமார் (10) ஆகியோர் சொரிமுத்து அய்யனார் கோயில் பகுதியில் தாமிரவருணி ஆற்றுப் பாலம் அருகே குளித்துக் கொண்டிருந்தனராம். அப்போது கார்த்திக், ஹரிகுமார் இருவரும் நீரில் மூழ்கினராம். உடனடியாக அருகிலிருந்தவர்கள் இருவரையும் மீட்டனர். ஆனால் இருவரும் உயிரிழந்தனர். தகவலறிந்த கல்லிடைக்குறிச்சி போலீஸார் இருவர் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பவத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

sea death 2

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version