- Ads -
Home சற்றுமுன் செப் 1இல் பிரதமர் நரேந்திர மோடி கேரளா கொச்சிக்கு வருகை..

செப் 1இல் பிரதமர் நரேந்திர மோடி கேரளா கொச்சிக்கு வருகை..

Tamil News large 3110086 1

செப் 1இல் பிரதமர் நரேந்திர மோடி கேரளா மாநிலம் கொச்சிக்கு வருகை தருகிறார்.கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தில் விக்ராந்த் போர்க்கப்பலை செப் 2இல் கடற்படையில் இணைத்து வைக்கிறார். புதிய கடற்படை கொடியை பிரதமர் அறிமுகம் செய்கிறார்.

செப் 1இல் மாலை 6 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி கேரளா மாநிலம் கொச்சிக்கு வருகை தருகிறார். அதன் அருகே உள்ள ஸ்ரீ ஆதிசங்கரர் அவதரித்த காலடி கிராமத்திற்கு பிரதமர் செல்கிறார். செப்டம்பர் இரண்டாம் தேதி காலை 9:30 மணிக்கு கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தில், முதன்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை கடற்படையில் இணைத்து வைக்கிறார்.

தொடர்ந்து புதிய கடற்படை கொடியை பிரதமர் அறிமுகப்படுத்த உள்ளார் இதன் பின்னர் மதியம் 1:30 மணிக்கு கர்நாடகா மாநிலம் மங்களூருவில் ரூ. 3800 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களை திறந்து வைக்கும் பிரதமர், சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version