- Ads -
Home சற்றுமுன் விதிகளை மீறி நடைமுறையை மாற்றிய அதிகாரியை கண்டித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்..

விதிகளை மீறி நடைமுறையை மாற்றிய அதிகாரியை கண்டித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்..

images 70

ஆகம விதிகளை மீறி நடைமுறையை மாற்றி அமைத்த அதிகாரியை பணியிடம் நீக்கம் செய்ய வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் அறிவிப்பு.

இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
ஶ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் செய்தியாளர்களை சந்தித்தார் இதில்.

தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக அறநிலையத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது அறநிலை துறைக்கு சொந்தமான இடங்களை மீட்டு வருவது நாங்கள் வரவேற்கிறோம்.

சில அதிகாரிகள் செய்யும் தவறால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வழிபாட்டு முறை குறித்து ராமானுஜர் வழிமுறைகளை ஏற்படுத்தி உள்ளார் ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக வழிமுறைகளை மாற்றி செயல்பட்டு வருகின்றனர்.

ஆச்சாரியா சம்பிரதாயம் உள்ள கோயில்களில் மரபு மீறப்பட்டு வருகிறது.

கோவில் உள் விவகாரங்களில் தலையிட அறநிலையத்துறைக்கு உரிமை இல்லை ஆனால் ஆகம விதிகளை மீறி கோயில் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவிலில் அதிகாரியாக இருந்த ஜெயராம் என்பவர் விதிமுறைகளை மாற்றி அமைத்து உத்திரவிளை பிறப்பித்துள்ளார்.

தன்னிச்சையாக செயல்பட்டு வரக்கூடிய அதிகாரியை பணியிட நீக்கம் செய்ய வேண்டும் கோவில் உள் விவகாரங்கள் தலையிடும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளை கண்டித்து சென்னையில் வரும் நவம்பர் 11ஆம் தேதி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version