- Ads -
Home சற்றுமுன் தமிழகத்தில் நாளை முதல் 17-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இல்லை..

தமிழகத்தில் நாளை முதல் 17-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இல்லை..

images 2022 10 17T165654.521 2

தமிழகத்தில் நாளை முதல் 17-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று ஒருசில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் நாளை முதல் வரும் 17ம் தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் 17 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

அடுத்தபடியாக திருத்தணியில் 13 செ.மீ மழை பதிவாகி உள்ளது. ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் 11 செ.மீ மழையும், மதுராந்தகம் மற்றும் திண்டிவனத்தில் 11 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version