- Ads -
Home சற்றுமுன் ‌ கோலங்கள், பஜனை வீதி உலாவுடன் துவங்கியது மார்கழி கொண்டாட்டம் ..

‌ கோலங்கள், பஜனை வீதி உலாவுடன் துவங்கியது மார்கழி கொண்டாட்டம் ..

இன்று மார்கழி மாதம் பிறந்தது.வீட்டு வாசல்களில் அதிகாலை வைகறையில் ‌வண்ணமயமான மார்கழி கோலங்கள் மலர பாரம்பரிய பஜனை வீதி உலா துவங்கியது.கோவில்களில் திருப்பாவை திருவெம்பாவை செவிகளில் மார்கழி பனிப்பொழிவோடு குளிரூட்டப்பட்ட ‌‌பக்தர்கள் அதிகாலை வைகறை பொழுது முதல் அதிகளவில் சிறப்பு வழிபாடு‌ நடத்தினர்.

தமிழகத்தில் உள்ள கோவில்களில், இன்று (டிச.,16) மார்கழி மாத துவக்கத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் துவங்கியது.

மாதங்களில் நான் மார்கழி என பெருமான் கூறுகிறார். குளிர் நிறைந்த மார்கழி மாதத்தில், அதிகாலை நேரத்தில் எழுந்து, நீராடி, திருப்பாவை, திருவெம்பாவை பாடி இறைவனை வழிபாடு செய்கின்றனர்.

பக்தர்கள், கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வதும்; பலர் குழுக்களாக இணைந்து, பஜனை பாடல்களை பாடி, தெருக்களில் அதிகாலை நேரத்தில் செல்வதும் வழக்கம். அதன்படி, இந்தாண்டும் கோவில்களில் மார்கழி மாத சிறப்பு பூஜைகள் இன்று துவங்கியது.

தமிழகத்தில் உள்ள பெருமாள் கோவிலில், மார்கழி சிறப்பு பூஜைகள் இன்று முதல் நடக்கிறது. கோவில் வளாகத்தில் உள்ள ஆண்டாள் மற்றும் பெருமாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.இரண்டு ஆண்டு கொரோனா கட்டுப்பாடு முடிந்த நிலையில் இந்த ஆண்டு மார்கழி மாதத்தில் பக்தி கொண்டாட்டம் கலகலப்பு டன் துவங்கியது.

images 2022 12 14T213350.732 1

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version