- Ads -
Home சற்றுமுன் ஸ்ரீரங்கத்தில் வைகுந்த ஏகாதசி திருவிழா தொடங்கியது..

ஸ்ரீரங்கத்தில் வைகுந்த ஏகாதசி திருவிழா தொடங்கியது..

Srirangam temple 5
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் வைகுந்த ஏகாதசி விழா தொடக்கமாக வெள்ளிக்கிழமை காலை விருச்சிக லக்னத்தில் மூலஸ்தானத்தில் இருந்து எழுந்தருளிய ஸ்ரீ நம்பெருமாள்

108 திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற முதன்மையான ஸ்தலம் ஸ்ரீரங்கத்தில் வைகுந்த ஏகாதசி திருவிழா இன்று கோலாகலமாக தொடங்கியது.ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் வைகுந்த ஏகாதசி விழா தொடக்கமாக வெள்ளிக்கிழமை காலை விருச்சிக லக்னத்தில் மூலஸ்தானத்தில் இருந்து எழுந்தருளிய ஸ்ரீ நம்பெருமாளை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோபாலா ரெங்கா ரெங்கா என கோஷமிட்டு தரிசனம் செய்தனர்.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் மார்கழி மாதம் நடைபெறும் வைகுந்த ஏகாதசி விழா தொடங்கியது. முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு ஜனவரி 2 ஆம் தேதி நடைபெறுகிறது.

108 வைணவ திருத்தலங்களில் முதன்மைத் திருத்தலம், பூலோக வைகுந்தம், பெரியகோயில் எனப் பக்தா்களால் போற்றப்படும் ஸ்ரீரங்கம் கோயிலின் மிகப்பெரிய விழாவான வைகுந்த ஏகாதசி விழா பகல்பத்து, இராப்பத்து என 21 நாள்கள் நடைபெறும்.

வெள்ளிக்கிழமை காலை விருச்சிக லக்னத்தில் மூலஸ்தானத்தில் இருந்து எழுந்தருளிய ஸ்ரீ நம்பெருமாள்.
அதன்படி இவ்விழா வியாழக்கிழமை (டிச.23) இரவு 7 மணிக்கு திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. தொடா்ந்து 7.45 மணி முதல் 9 மணி வரை சந்தனு மண்டபத்தில் திருநெடுந்தாண்டகத்தின் அபிநயமும், வியாக்யானமும், 9 மணி முதல் 9.30 மணி வரை திருப்பணியாரம் அமுது செய்தலும் நடைபெற்றது. 

வெள்ளிக்கிழமை தொடங்கி ஜனவரி 1 வரை நடைபெறவுள்ள பகல் பத்து விழாவில் நாள்தோறும் நம்பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் அா்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி காட்சியளிக்கிறாா்.

பகல்பத்தின் கடைசி நாளான ஜனவரி 1 ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சி தருகிறாா். அதனைத்  தொடா்ந்து இராப்பத்து விழாவின் முதல் நாளான 2 ஆம் தேதி முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு நடைபெறவுள்ளது.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாகதசி பகல் பத்து முதல் நாள் வெள்ளிக்கிழமை அர்ச்சுன மண்டபத்தில் இரத்தின நீள்முடிகிரீடம் , இரத்தின அபயஹஸ்தம் , கபாய் சட்டை , நெல்லிக்காய் மாலை ,காசு மாலை உள்ளிட்ட திரு ஆபரணங்கள் அலங்காரத்தில் ஸ்ரீ நம்பெருமாள்பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தினமும் நடைபெறும் வைபவங்களில் 10 விதமான வாத்திய கருவிகள் வாசிக்கப்படும். வைகுண்ட ஏகாதசி விழா காலங்களில் மட்டும் 18 விதமான வாத்திய கருவிகள் வாசிக்கப்படும். இதில் பெரியமேளம், நாதஸ்வரம், டக்கை. சங்கு, மிருதங்கம், வெள்ளியெத்தாளம், செம்புயெத்தாளம், வீரவண்டி உள்பட 18 வாத்திய கருவிகள் வாசிக்கப்படுவது சிறப்பம்சமாகும்.


NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version