- Ads -
Home சற்றுமுன் முதல்வர் ஸ்டாலினை பாஜக., குழு சந்திக்க நேரம் கேட்டுள்ள அண்ணாமலை!

முதல்வர் ஸ்டாலினை பாஜக., குழு சந்திக்க நேரம் கேட்டுள்ள அண்ணாமலை!

தாங்கள் வருகின்ற ஜூலை 11ந் தேதி முதல் 13த் தேதி அல்லது இம்மாதத்தில் ஏதாவது ஒரு தினத்தில், தங்களது பொன்னான நேரத்தை

1719347 mk stalin

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

மது இல்லா தமிழகத்தை உருவாக்குவது குறித்து பாஜக ஒரு திட்டம் வகுத்துள்ளது. இந்த திட்ட அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக பாஜக., துணைத் தலைவர் கரு.நாகராஜன் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு தங்களை சந்திக்க நேரம் ஒதுக்கி தரவேண்டும். இம்மாதத்தில் ஒருநாள் சந்திக்க நேரம் ஒதுக்கி தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று அண்ணாமலை கூறி உள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதம்….

மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு !

பொருள் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தங்களை நேரில் சந்திக்க நேரம் ஓதுக்கி தருமாறு கோருதல்

மது இவ்லாத தமிழகம் என்பது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கனவு மட்டுமல்ல, தமிழக பொது மக்களின் விருப்பமும் அதனை நிறைவேற்றிட, தமிழக பாரதிய ஜனதர கட்சியானது தகுந்த ஆலோசனைகளையும், கருத்துக்களையும் வகுத்துள்ளது. இது குறித்த வெள்ளை அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதாக நான் ஏற்கனவே அறிவித்திருந்தேன்.

இது தொடர்பாக, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாநில துணை தலைவர் திரு. கருநாகராஜன் அவர்கள் தலைமையிலான ஐவர் குழுவானது தங்களை சந்தித்து, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் திட்டத்தினை தங்களிடம் சமர்ப்பிக்குமாறு அறியுறுத்தியுள்ளேன்.

ஆகவே தாங்கள் வருகின்ற ஜூலை 11ந் தேதி முதல் 13த் தேதி அல்லது இம்மாதத்தில் ஏதாவது ஒரு தினத்தில், தங்களது பொன்னான நேரத்தை இந்த சந்திப்பிற்கு ஒதுக்கி தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

தங்களது மேலான பதியினை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

-என்று எழுதியுள்ளார் அண்ணாமலை.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version