- Ads -
Home சற்றுமுன் மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்!

மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்!

மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்; கோவில் நிர்வாகம் தகவல் - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!!

மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்; கோவில் நிர்வாகம் தகவல் – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!!

madurai vandiyoor mariamman temple theppakulam

மதுரை: மதுரையின் புகழ்பெற்ற அடையாளங்களில் ஒன்றாக திகழ்வது மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் ஆகும்.

திருமலை நாயக்கர் மஹால் கட்டுப்பட்டுவதற்காக தோண்டப்பட்ட இடத்தில் இந்த தெப்பக்குளம் உருவாக்கப்பட்டது, இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாரியம்மன் தெப்பக்குளம் மிகவும் புகழ்பெற்ற ஆன்மீகம் மற்றும் சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. 

மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தை உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ஏராளமானோர் பார்வையிட்டு செல்கின்றனர்.

இந்த தெப்பக் குளத்தில் 40 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் வைகை ஆற்றில் இருந்து நேரடியாக தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, 2020 நவம்பர் முதல் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்காக படகு சேவை துவங்கப்பட்டது.

இந்த நிலையில், தெப்பக்குளத்தில் தண்ணீர் குறைந்ததன் காரணமாக படகு சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததற்கு பிறகு, நீர் நிரப்பப்பட்டு மீண்டும் சேவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version