- Ads -
Home சற்றுமுன் தியானம், தவத்தினூடே… நாட்டின் நிலவரம் குறித்தும் சமூகப் பதிவு!

தியானம், தவத்தினூடே… நாட்டின் நிலவரம் குறித்தும் சமூகப் பதிவு!

ஒரு பக்கம் தியானமும் தவமும் மேற்கொண்டாலும் ஒரு பக்கம் நாட்டின் நிகழ்வுகள் குறித்த கவலையை மற்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் வழக்கம்போல் தனது சமூக வலைதளப் பதிவில் செய்தி

#image_title
kumarimunai modi thavam
#image_title

ஒரு பக்கம் தியானமும் தவமும் மேற்கொண்டாலும் ஒரு பக்கம் நாட்டின் நிகழ்வுகள் குறித்த கவலையை மற்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் வழக்கம்போல் தனது சமூக வலைதளப் பதிவில் செய்தியை பகிர வைத்துள்ளார் பிரதமர் மோடி.

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். நேற்று மாலை கன்னியாகுமரி வந்தடைந்த பிரதமர் மோடி, அங்குள்ள பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்த பின், விவேகானந்தர் பாறைக்கு சென்று, தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.

நாளை மாலை வரை விவேகானந்தர் பாறை, மற்றும் திருவள்ளுவர் பாறை பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி இருக்கும் நிலையில், இன்று தனது எக்ஸ் தளத்தில் நாட்டின் நிகழ்வுகள் குறித்த தனது வழக்கமான கவலை மற்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பதிவிட்டுள்ளார்.

அதில், “அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், திரிபுரா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் ரெமல் புயல் காரணமாக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுவிட்டது. எனது எண்ணமும், பிரார்த்தனையும் அங்கு பாதிக்கப்பட்டோருடனேயே உள்ளது. அங்குள்ள கள சூழல் குறித்து கேட்டறிந்தேன். மத்திய அரசு பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தேவையான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்ததோடு, அங்குள்ள கள நிலவம் குறித்தும் கேட்டறிந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அதிகாரிகள் களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர்,” என குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில், “2023-24 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ஜி.டி.பி. வளர்ச்சி நமது பொருளாதாரத்தை பெருமளவு வளர்ச்சியடைய செய்யும் என்பதை காட்டுகிறது. நம் நாட்டின் கடின உழைப்பாளிகளுக்கு நன்றி, 2023-24 காலக்கட்டத்தில் நாட்டின் 8.2 சதவீத வளர்ச்சி உலகளவில் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இருப்பதை வெளிப்படுத்துகிறது. நான் ஏற்கனவே கூறியதை போன்றே இவை அனைத்தும், எதிர்காலத்தில் நடக்கப் போகும் சம்பவங்களுக்கான முன்னோட்டம் தான்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version