- Ads -
Home சற்றுமுன் ஜெனகை மாரியம்மன் கோவில் 11ம் நாள் மண்டகப்படி விழா கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் 11ம் நாள் மண்டகப்படி விழா கோலாகலம்!

மதுரை மாவட்டம் பாலமேடு தெற்கூர் நாயுடு உறவின்முறைக்கு தனித்து பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

janagai mariamman 11 day function

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா 11ஆம் நாள் மண்டகப்படி விழா

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா 11ஆம் நாள் மண்டக படி விழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு மண்டக படிக்கு வந்து. அங்கு பால், தயிர் உள்பட 21 அபிஷேகங்கள் நடைபெற்றது.இதை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கு சோழவந்தான் பேரூராட்சி தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார்.

மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வக்கீல் சத்தியபிரகாஷ், தெற்குரதவீதி மேலரத வீதி வெள்ளாளர் உறவின்முறை சங்க தலைவர் தங்கராஜ் பிள்ளை,செயலாளர் அருணாசலம்,முன்னாள் சேர்மன் எம்கேமுருகேசன், ஆர்எம்எஸ் காலனி இன்ஜினியர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் அணி தலைவர் அன்பு வரவேற்றார்.

மாலையில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இதில் 500 பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். விழா குழு பொருளாளர் பாஸ்கர் என்ற ராஜசேகரன், சங்க துணை செயலாளர் பெரியசாமி, சங்க பொருளாளர், பாலசுப்பிரமணியன், முன்னாள் பொருளாளர் மணிகண்டன், நாகேந்திரன், விவசாய த்துறை மாணிக்கம், வார்டு கவுன்சிலர் ரேகா ராமச்சந்திரன், தெற்கு ரத வீதி இளைஞர் நற்பணி மன்ற செயலாளர் பாலு, பொருளாளர் கார்த்திக், துணைத் தலைவர் சிவா, துணைச் செயலாளர் விஜயகோபால், துணைச் செயலாளர் கருந்தேஸ்வரன், விழா குழு உறுப்பினர்கள் பார்த்திபன், காளிதாஸ், சரவணன், சண்முகம், சசிகுமார் மற்றும் சங்க நிர்வாகிகள், சிறப்பு நன்கொடையாளர்கள் உட்பட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.

முன்னாள் கவுன்சிலர்கள் தண்டபாணி, சௌந்தரபாண்டியன் ஆகியோர் நன்றி கூறினர். இரவு அம்மன் யானை வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது. கேரளா இசை கலைஞர்கள் செண்டை மேளம் மற்றும்மதுரை கே ஆர் கே வழங்கும் ஸ்ரீ சப்தகிரி தெய்வீக சாமி ஆட்டம் நடந்தது.

சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் உட்பட போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

பாலமேட்டில் ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் உற்சவ விழா – பால்குடம், தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

மதுரை மாவட்டம் பாலமேடு தெற்கூர் நாயுடு உறவின்முறைக்கு தனித்து பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

மூன்று நாட்கள் நடந்த இந்த திருவிழாவில் முதல் நாளில் மறவபட்டி சென்று அம்மனை அழைத்து வருதல், பூசாரி வீட்டிலிருந்து நகைப்பெட்டி தூக்கி சென்று அம்மனுக்கு கண்திறந்து நகை அலங்காரத்துடன் அம்மன் ஆலயத்திற்கு அழைத்து வருதல் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இரண்டாம் நாளில் முத்தாலம்மனுக்கு பொங்கல் வைத்து கிடாய் வெட்டி பக்தர்கள் பால்குடம் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து மூன்றாம் நாளில் அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

இந்த திருவிழா ஏற்பாடுகளை தெற்கூர் நாயுடு உறவின்முறை சங்கம், இளைஞர் சங்கம் செய்திருந்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version