- Ads -
Home சற்றுமுன் காபி சூட்டை கூட தாங்காதவள் காட்டுத்தீயை எப்படி தாங்கினாள்: உயிரிழந்த சுபாவின் தாயார் கதறல்

காபி சூட்டை கூட தாங்காதவள் காட்டுத்தீயை எப்படி தாங்கினாள்: உயிரிழந்த சுபாவின் தாயார் கதறல்

subha1ஒவ்வொரு விஷயத்திலும் இனிமேல் பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை இந்த குரங்கணி காட்டுத்தீ உணர்த்தியுள்ளது. குழந்தைகளுக்கு தேவையானதை வாங்கி கொடுத்தால் மட்டும் போதாது அவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்த காட்டுத்தீ உணர்த்தியுள்ளது.

மலையில் டிரெக்கிங் செல்வது என்பது சாதாரண விஷயம் இல்லை. நல்ல பயிற்சியாளர்கள், தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் முக்கியமாக வனத்துறையின் அனுமதி இருக்கின்றதா? என்பதை கண்காணித்து இனிமேல் தங்கள் குழந்தைகளை டிரெக்கிங் அனுப்ப வேண்டும். வீடு ஒன்றில் டிரெக்கிங் அலுவலகம் நடத்தி வந்த அந்த சென்னை நிறுவனம், ஒரு பிரச்சனை என்றவுடன் திடீரென அலுவலகத்தை பூட்டிவிட்டு தப்பித்துவிட்டனர். இனி யார் மீது நடவடிக்கை எடுப்பது?

டிரெக்கிங் சென்றவர்களில் உயிரிழந்தவர்களின் பெற்றோர்கள் விடும் கண்ணீர் கல்நெஞ்சையும் கரைப்பதாக உள்ளது. குறிப்பாக உயிரிழந்தவர்களில் ஒருவரான சுபாவின் தாயார், ‘ காபியைக்கூட சூடா குடிக்க மாட்டாளே.. இந்த நெருப்பை எப்படித் தாங்கினாளோ என் புள்ளை” என்று கதறிய கதறல் கண்ணீரை வரவழைப்பதாக உள்ளது. இனிமேலாவது டிரெக்கிங் என்றில்லை, குழந்தைகள் எங்கு அனுப்பினாலும் அவர்களது பாதுகாப்பை ஒருமுறைக்கு பலமுறை உறுதி செய்யுங்கள்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version