- Ads -
Home சற்றுமுன் சிறுமிகளை வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை

சிறுமிகளை வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை

12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை அளிக்க வகை செய்யும் அவசரச் சட்டம் கொண்டுchild வர மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் சிறுமிகளை பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கு உத்தரப் பிரதேசத்தில் நடந்த  மற்றும் ஜம்மு காஷ்மீரில் நடந்த கத்வா சம்ப்வங்கள் உதாரணமாக உள்ளன.

ஜம்மு-காஷ்மீரின் கத்வா நகரில் 6 பேரால் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு பின் கொடூர முறையில் கொலை செய்யப்பட்டார். இதேபோல், உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் நகரில் டீன் ஏஜ் சிறுமியை எம்.எல்.ஏ. ஒருவர் பலாத்காரம் செய்து விட்டார் என குற்றச்சாட்டு எழுந்தது. இதில் விசாரணைக்காக போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட சிறுமியின் தந்தை சிறையில் உயிரிழந்து விட்டார். இதில் தொடர்புடைய எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார்.

இந்த இரு சம்பவங்களும் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தியாவில் மட்டுமல்லாது, பல்வேறு வெளிநாடுளில் வசித்து வரும் இந்தியர்களும் இந்த சம்பவத்திற்கு கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் குழந்தைகள் எதிரான பாலியல் சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு அளிக்கப்படும் போஸ்கோ (POSCO – Protection of Children from Sexual Offences Act) சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில் சிறுமிகளை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை அளிக்க வகை செய்யும் அவசரச் சட்டம் கொண்டு வர மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version