- Ads -
Home சற்றுமுன் புதுக்கோட்ட அம்புட்டு தூரமாவா இருக்கு..?!

புதுக்கோட்ட அம்புட்டு தூரமாவா இருக்கு..?!

புதுக்கோட்டையில் ஒரு ரயில்வே ஸ்டேஷன் இருப்பது முதியவர்களுக்கும் பெண்களுக்கும் சந்தோஷமான விஷயம்தான். ஆனால் அங்கு மூன்று எக்ஸ்பிரஸ் ரயில்கள்தான் தினசரி வந்து போகிறது. 
 
சென்னை எழும்பூரில் இருந்து தினமும் மாலை 5 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்:16713) இரவு 11.45 -க்கு புதுக்கோட்டை வந்து சேருகிறது. இதே எக்ஸ்பிரஸ் மறு மார்க்கத்தில் ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (வ.எ.16714) ஆக நள்ளிரவு 12.30 -க்கு புறப்பட்டு காலை 8.20-க்கு எழும்பூர் சென்று சேருகிறது. 
 
1.bp.blogspot.com oyau lxOV4U Vhbmsw6NsmI AAAAAAAAGHM UGcjDytzFBw s320 Pudukkottai Station
 
அடுத்து பகல் நேர வண்டியான பல்லவன் எக்ஸ்பிரஸ் (வ.எ.12606) சென்னை எழும்பூரில் மதியம் 3.45 மணிக்கு 4-வது பிளாட்பாரத்தில் இருந்து புறப்பட்டு, இரவு 10.11 -க்கு புதுக்கோட்டை வந்து சேருகிறது. இதே வண்டி (வ.எ.12605) மறு மார்க்கத்தில் காலை 05.05 -க்கு புதுக்கோட்டையில் இருந்து புறப்பட்டு மதியம் 12.10-க்கு சென்னை சென்று சேருகிறது. 
 
இந்த ரயில்கள் எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம், ராமேஸ்வரம் போன்ற ஊர்களை இணைக்கிறது. இந்த ஊர்களில் இருந்து புதுக்கோட்டைக்கு தாரளமாக ரயிலில் வரலாம். 
 
இது போக ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (வ.எ.16101) சென்னை எழும்பூரில் இருந்து இரவு 9.40-க்கு புறப்பட்டு, தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி,புதுக்கோட்டை, செட்டிநாடு, காரைக்குடி, தேவகோட்டை ரோடு, கல்லல், சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம், பாம்பன், ராமேஸ்வரம் போன்ற ஊர்களை இணைக்கிறது. இந்த வண்டி புதுக்கோட்டைக்கு காலை 06.25-க்கு வருகிறது.  
 
இதே வண்டி மறுமார்க்கத்தில் சென்னை எக்ஸ்பிரஸ் (வ.எ.16102) ஆக இரவு 9.14-க்கு புறப்பட்டு காலை 6.30-க்கு எழும்பூர் சென்று சேருகிறது. 
 
விமானத்தில் வருபவர்கள் திருச்சி விமான நிலையத்தில் இறங்கி அங்கிருந்து புதுக்கோட்டைக்கு சாலை மார்க்கமாக வந்து விடலாம். 
 
இனி நமது வலைப்பதிவர்களின் வருகைப் பதிவு பட்டியல் வரிசையில் உள்ள ஊர்களுக்கும் புதுக்கோட்டைக்கும் இடையே இருக்கும் தூரம், பயண நேரம் ஆகியவற்றைப் பார்ப்போம். 
 
 
 
அரியலூர் 
தொலைவு: 110 கி.மீ.  பயண நேரம்: 2 மணி 30 நிமிடம்
 
ராமநாதபுரம் 
தொலைவு: 132 கி.மீ.  பயண நேரம்: 2 மணி.40 நிமிடம்
 
ஈரோடு
தொலைவு: 202 கி.மீ.  பயண நேரம்: 3 மணி 50 நிமிடம்
 
கரூர்
தொலைவு: 138 கி.மீ.  பயண நேரம்: 2 மணி 45 நிமிடம்
 
கன்னியாகுமரி 
தொலைவு: 355 கி.மீ.  பயண நேரம்: 6 மணி 10 நிமிடம்
 
காஞ்சிபுரம் 
தொலைவு: 341 கி.மீ.  பயண நேரம்: 5 மணி 45 நிமிடம்
 
கிருஷ்ணகிரி 
தொலைவு: 304 கி.மீ.  பயண நேரம்: 5 மணி 15 நிமிடம்
 
கோயம்புத்தூர் 
தொலைவு: 285 கி.மீ.  பயண நேரம்: 5 மணி 00 நிமிடம்
 
சிவகங்கை 
தொலைவு: 92 கி.மீ.  பயண நேரம்: 1 மணி 45 நிமிடம்
 
சென்னை 
தொலைவு: 384 கி.மீ.  பயண நேரம்: 7 மணி 05 நிமிடம்
 
சேலம் 
தொலைவு: 193 கி.மீ.  பயண நேரம்: 3 மணி 45 நிமிடம்
 
தஞ்சாவூர் 
தொலைவு: 61 கி.மீ.  பயண நேரம்: 1 மணி 30 நிமிடம்
 
திண்டுக்கல் 
தொலைவு: 114 கி.மீ.  பயண நேரம்: 2 மணி 00 நிமிடம்
 
திருநெல்வேலி 
தொலைவு: 272 கி.மீ.  பயண நேரம்: 4 மணி 45 நிமிடம்
 
திருச்சிராப்பள்ளி 
தொலைவு: 55 கி.மீ.  பயண நேரம்: 1 மணி 10 நிமிடம்
 
திருப்பூர் 
தொலைவு: 225 கி.மீ.  பயண நேரம்: 4 மணி 45 நிமிடம்
 
திருவண்ணாமலை 
தொலைவு: 238 கி.மீ.  பயண நேரம்: 4 மணி 15 நிமிடம்

திருவள்ளூர்
தொலைவு: 380 கி.மீ.  பயண நேரம்: 6 மணி 45 நிமிடம்

திருவாரூர்
தொலைவு: 121 கி.மீ.  பயண நேரம்: 2 மணி 45 நிமிடம்
 
தேனி
தொலைவு: 195 கி.மீ.  பயண நேரம்: 4 மணி 25 நிமிடம்
 
நாகப்பட்டினம் 
தொலைவு: 147 கி.மீ.  பயண நேரம்: 3 மணி 35 நிமிடம்
 
நாமக்கல் 
தொலைவு: 141 கி.மீ.  பயண நேரம்: 3 மணி 00 நிமிடம்
 
பாலக்காடு 
தொலைவு: 284 கி.மீ.  பயண நேரம்: 5 மணி 45 நிமிடம்
 
புதுச்சேரி 
தொலைவு: 254 கி.மீ.  பயண நேரம்: 4 மணி 45 நிமிடம்
 
பெங்களூர் 
தொலைவு: 395 கி.மீ.  பயண நேரம்: 7 மணி 10 நிமிடம்
 
பெரம்பலூர் 
தொலைவு: 112 கி.மீ.  பயண நேரம்: 2 மணி 10 நிமிடம்
 
மதுரை 
தொலைவு: 110 கி.மீ.  பயண நேரம்: 2 மணி 30 நிமிடம்
 
விருதுநகர்
தொலைவு: 163 கி.மீ.  பயண நேரம்: 3 மணி 15 நிமிடம்
 
வேலூர் 
தொலைவு: 322 கி.மீ.  பயண நேரம்: 5 மணி 45 நிமிடம்
 
 
இங்கே குறிப்பிட்டுள்ள பயண நேரம் கார்களில் வரும் நேரத்தைக் கொண்டே கொடுக்கப்பட்டுள்ளது. பொது வாகனங்களில் வரும் போது சாலையின் தன்மை போக்குவரத்து நெரிசலை பொறுத்து 30 நிமிடங்கள் முதல் ஒன்றரை மணி நேரம் வரை நேரம் கூடுதலாக எடுத்துக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. எனவே அதற்கேற்றார்ப் போல் திட்டமிட்டு பயணத்தை தொடங்குங்கள்.
 
பயணம் இனிமையாக அமைய வாழ்த்துக்கள்!

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version