- Ads -
Home சற்றுமுன் மதுரையில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி மற்றும் போட்டி INGENIOUS’ 2K16 : தங்கும் வசதி...

மதுரையில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி மற்றும் போட்டி INGENIOUS’ 2K16 : தங்கும் வசதி உணவு இலவசம்

 
நீர் வழிச் சாலை திட்டம் குறித்த மாநில அளவிலான INGENIOUS’2K16 எனும் பெயரில் அறிவியல் கண்காட்சி மற்றும் போட்டி மதுரை அழகர் கோவில் அருகேயுள்ள லதாமாதவன் தொழில்நுட்பக் கல்லூரியில் வருகிற ஜனவரி 29, 30 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற இருப்பதாக நீர் வழிச் சாலை திட்டக் குழு உறுப்பினரும், நாவாட் டெக் அமைப்பின் தலைவருமான பேராசிரியர் ஏ.சி.காமராஜ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
 
மேலும் பேராசிரியர் ஏ.சி.காமராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது :-
 
 
நீர் வழிச் சாலை திட்டம் குறித்த மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியை நவாடு எனும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மையமும், லதாமாதவன் கல்வி குழுமமும் இணைந்து நடத்துகிறது.தமிழ்நாட்டில் படிக்கும் அனைத்து பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் கண்காட்சி மாநில அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
மாணவர்களின் அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளையும், அவர்களது திறமையையும் ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவிலான போட்டிகளும் நடைபெறவுள்ளன. போட்டிகளில் பங்குபெற எவ்விதமான கட்டணமும் இல்லை .மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் எந்த மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர்கள் வேண்டுமானாலும் பங்குபெறலாம். அறிவியல் கண்காட்சி போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு கல்லூரியில் தங்கும் வசதியும், உணவும் இலவசமாக அளிக்கப்படும்.
 
அறிவியல் கண்காட்சி போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக் என்ற மூன்று தனிப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மூத்த மாணவ அறிவியலாளர், இளம் அறிவியலாளர், வளரும் அறிவியலாளர், எனும் மூன்று விருதுகள் தனித்தனியே வழங்கப்பட உள்ளது.
 
மேலும் அறிவியல் கண்காட்சி போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் அனைவருக்கும் மதிப்புமிக்க பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றார் பேராசிரியர் ஏ.சி.காமராஜ் .
 
 
மாணவர்கள் அவர்களுடைய அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளை நடைபெறும் கண்காட்சியில் இடம் பெறச் செய்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கலாம். நீர் வழிச் சாலையால் ஏற்படும் நன்மைகள் குறித்து இளைஞர்கள் அனைவருக்கும் விளக்கம் அளிக்கும் பொருட்டு இந்த கண்காட்சியானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
நாளைய இந்தியா வளம் பெறவும், அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கச் செய்யவும், நீர் வழிச் சாலை திட்டத்தை உடனே அரசு செயல்படுத்த வலியுறுத்தியும், அனைவருக்கும் இந்த திட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இளைஞர்கள் ஒன்றிணைந்து இந்த அறிவியல் கண்காட்சியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைச் செல்வங்களை அவர்களுடைய கண்டுபிடிப்புகளுடன் பங்கேற்கச் செய்ய வேண்டுமென நீர் வழிச் சாலை திட்டக் குழு உறுப்பினர் பேராசிரியர் ஏ.சி.காமராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
அறிவியல் கண்காட்சி போட்டியில் பங்கேற்பது குறித்தான மேலும் விபரங்களுக்கு மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விபரப்படி கண்காட்சி குழுவினரை அவர்களது கைபேசி எண் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம் என பேராசிரியர் ஏ.சி.காமராஜ் அறிவித்துள்ளார்.
 
 
பள்ளி மாணவர்கள்:-
 
S. தமிழ்சோலை 98420 06058
பெரிய பாண்டி 88838 70539
 
பாலிடெக்னிக் மாணவர்கள்:-
 
K. மோகன் 95004 82667
S. பிரபு 99429 03933
 
பொறியியல் மாணவர்கள்:-
 
S. சதீஸ் குமார் 99655 03934
T.K சிவகுமார் 80569 94854
 
கலை மற்றும் அறிவியல் மாணவர்கள்:-
 
U. ஹரி சுதன் 96261 38881
M. முருகன் 98656 50377
 
ஐடிஐ மற்றும் ஐடிஎஸ் மாணவர்கள்:-
 
A. செல்வராஜ் 97509 44663
மயில்வாகனன் 98420 17872
 
அறிவியல் கண்காட்சி குறித்தான மற்ற விபரங்களுக்கு :
 
நாவாட் டெக் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள்:
 
D. மணிகண்டன் 81484 60751
M. கார்த்திகேயன் 96008 07016

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version