- Ads -
Home சற்றுமுன் தமிழக காவல் துறையின் மானத்தை கப்பல் ஏற்றிய காவல் ஆய்வாளர்

தமிழக காவல் துறையின் மானத்தை கப்பல் ஏற்றிய காவல் ஆய்வாளர்

தமிழக காவல் துறையில் திருவண்ணமலை மாவட்டத்தில் ஆய்வாளராக பணியாற்றும் பழனி என்று கூறப்படுவர் ஒரு குற்ற வழக்கில் இருந்து குற்றவாளியை சட்டத்தின் பிடியில் இருந்து விடுவிக்க ரூ.5 லட்சம் வழக்கறிஞர் ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டும் கைப்பேசி உரையாடல் ஒலிப்பதிவு ஒன்று வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவியது.
இந்த நிலையில் காவல் ஆய்வாளர் கைப்பேசி உரையாடல் ஒலிப்பதிவை சி.டி யில் பதிவிட்டு அந்த ஆடியோவை அவரால் பாதிக்கப்பட்டவர்கள் உளுந்தூர்பேட்டை பகுதியில் பொதுமக்களிடம் இலவசமாக வினியோகம் செய்து வருவதாக வாட்ஸ் ஆப்பில் தகவல் வைரலாக பரவிவருகிறது..
அந்த ஒலிப்பதிவில் காவல் ஆய்வாளர் அநாகரீகமான கீழ்த்தரமான வார்த்தைகளையும் பயன்படுத்தியுள்ளார்.
வாட்ஸ்ஆப்பில் வெளியான ஆய்வாளர் ஒலிப்பதிவுடன் கூறப்படும் இருவிதமான தகவல்களாவது :-
1) பணம் கொடுத்தால் கொலை செய்யகூட ரூட் போட்டு கொடுப்பாரு போல ஆய்வாளர் பழனி. 5 லட்சம் பணம் கேட்டு மிரட்டும் திருவண்ணாமலை தாலுக்கா காவல் ஆய்வாளர் பழனி.
டுபாக்கூர் வக்கீல்…லஞ்சப் பணத்தை அருமையாக பிரித்து கொடுக்கும் அழகு…கீழ்த்தரமான வார்த்தைகள் நாக்கில் நடனம்…எஸ்.பி க்கு நெருக்கம்…..கேடி புத்தி…..கிரிமினல் சகவாசம்….⁠⁠⁠⁠
2) மேற்கண்ட இன்ஸ்பெக்டர் உளுந்தூர்பேட்டை யில் பல்வேறு புகாரின் அடிப்படையில் தான் திருவண்ணாமலை இடமாற்றம் செய்யப்பட்டார் .
தமிழக காவல் துறையில் உயர்ந்த பதவி அதிகார இருக்கையில் நேர்மையாகவும் நியாயமாகவும் பணியாற்றும் சில அதிகாரிகள் இருக்கின்றனர். ஆனால், பலர் காட்டுதர்பார் செய்து கொண்டு பண பேரம் செய்து வருகின்றனர் என்பது இது போன்று வெளியாகும் ஆடியோக்களால் வெளியில் தெரிகிறது.
தன்னிச்சையாக பதவி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பண வேட்டை நடத்த சட்டத்திற்கு புறம்பான செயல்களில் சிலர் தொடர்ந்து ஈடுபட்டு வருவது வேதனை தரக்கூடியது.
மக்களின் வரி பணத்தை சம்பளமாக பெற்று கொண்டு அரசாங்க பணியில் பணியாற்றுபவர்கள் பொது மக்களின் நலனில் அக்கறையுடன் பணியாற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு .
காவல் ஆய்வாளர் மிரட்டிய கைப்பேசி உரையாடல் ஒலிப்பதிவு புகைப்படம் இணைக்கப்பட்ட காணொளியாக வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்கும் ஆய்வாளரின் உரையாடல்! எனும் தலைப்பில் www.dhinasari.com
இணைய தமிழ்ச் செய்தித் தளத்தில் இன்று வெளியிப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version