கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் ஸ்டாலின் 64 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
திமுக பொருளாளர் ஸ்டாலின் 64 வது பிறந்தநாள் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சிவபத்மநாதன் தலைமையில் பாவூர் சத்திரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது விழாவிற்கு கிழக்கு ஒன்றிய செயலாளார் இராமச்சந்திரன், நகர செயலாளர்; ஜெகதீஸ், மகளீரணி வைத்தீஸ்வரி, ராசாத்தி ,ஆகியோர் முன்னிலை வகித்தனர் . விழாவில் ஸ்டாலின் 64 வது பிறந்த நாளை முன்னிட்டு 64 கிலோ லட்டுகளை பொதுமக்களுக்கு வழக்கறிஞர் சிவபத்மநாதன் வழங்கினார் விழாவில் ஊராட்சி செயலாளர்கள் சீனித்துரை, சமுத்திரபாண்டி, மதிச்செல்வன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ராஜாமணி, ஒன்றிய பிரதிநிதி சிவநாடானூர் முருகேசன், உட்பட பலர் கலந்து கொண்டனர் , முடிவில் பாவூர் சத்திரம் நகர செயலாளர் நடராஜன் நன்றி கூறினார்