- Ads -
Home சற்றுமுன் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை

நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற்ற 232 தொகுதிகளிலும் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. வாக்கு எண்ணும் மையத்துக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். காலை 9 மணி முதல் முன்னணி நிலவரம் தெரியவரும். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் எல்லா தொகுதிகளிலும் பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் இல்லாமல் அமைதியாக வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 232 தொகுதிகளில் நேற்று முன்தினம் பதிவான வாக்கு பெட்டிகள் அனைத்தும் மத்திய துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. நாளை காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும்.  தமிழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள 68 வாக்குப்பதிவு மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஒவ்வொரு மையத்திலும் 14 டேபிள் போடப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். சோழிங்கநல்லூர் தொகுதியில் மட்டும் 24 டேபிள் போடப்பட்டிருக்கும். ஒவ்வொரு டேபிளில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கைகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்படும். சிசிடிவி கேமராவும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தை சுற்றி துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். 2வது அடுக்கில் மாநில ஆயுதப்படை போலீசாரும், 3வது கட்ட பாதுகாப்பில் சாதாரண போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

வாக்குப்பதிவு மையத்திற்குள் வரும் ஏஜென்டுகள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. மின்தடை ஏற்பட்டால் மாற்று ஏற்பாடாக அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் ஜெனரேட்டர் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கும். வாக்கு எண்ணிக்கையில் 9629 அரசு ஊழியர்கள் ஈடுபடுவார்கள். ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறையிலும் ஒரு மைக்ரோ அப்சர்வர் என மொத்தம் 3,971 மத்திய அரசு ஊழியர்கள் இருப்பார்கள். மத்திய-மாநில அரசு ஊழியர்கள் என மொத்தம் 13,592 பேர் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுகிறார்கள். வழக்கமாக தபால் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.  ஆனால், இந்த முறை தபால் வாக்கு மற்றும் மின்னணு எந்திரத்தில் பதிவான வாக்குகள் இரண்டுமே காலை 8 மணிக்கு எண்ணப்படும்.

ஆனால், கடைசி ரவுண்டு வாக்குகள் மின்னணு எந்திரத்தில் எண்ணி முடிக்கப்படுவதற்கு முன் தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு இருக்க வேண்டும். இவ்வாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார். வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்க உள்ள நிலையில், காலை 9 மணிக்கு, 232 தொகுதியிலும் முதல் ரவுண்ட் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு முன்னணி நிலவரங்கள் தெரியவரும் என்று தேர்தல் அதிகாரிகள் கூறினர். மறுவாக்குபதிவு: தென்காசி தொகுதியில் மட்டும் 56வது  பூத்தில் 66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மாதிரி வாக்கு  நடைபெற்றபோது பதிவான 52 வாக்குகள் அதில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதை  மத்திய தேர்தல் பார்வையாளர் கண்டுபிடித்தார். இதையடுத்து அந்த பூத்தில்  மட்டும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல்  ஆணையத்துக்கு பரிந்துரை செய்துள்ளார். அதனால் அந்த பூத்தில் இன்று  மறுவாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட வாய்ப்புள்ளது…

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version