- Ads -
Home சமையல் புதிது எவ்வளவு ஈஸி தெரியுமா.. ஜவ்வரிசி வடாம்!

எவ்வளவு ஈஸி தெரியுமா.. ஜவ்வரிசி வடாம்!

Sago vadam - 2026

ஜவ்வரிசி வடாம்
தேவையானவை :
ஜவ்வரிசி – 1 கிலோ (5 ஆழாக்கு),
பச்சை மிளகாய் – 20,
உப்பு – தேவைக்கேற்ப.
பெருங்காயம் – சிறிதளவு,
சீரகம் – 2 டீஸ்பூன்,
நைலான் எள்ளு – 2 டீஸ்பூன்,
எண்ணெய் – 4 டீஸ்பூன்
எலுமிச்சம் பழம் – 4.
செய்முறை :
ஜவ்வரிசியை ஊறப் போடவும். நன்கு ஊறியதும், நீரை வடித்து விட்டு, குக்கரில் போட்டு, 3 பங்கு தண்ணீர் ஊற்றவும். உப்பு, பெருங்காயம், பச்சை மிளகாய் இவற்றை அரைத்து அதில் கலக்கவும். சீரகம், நைலான் எள்ளு இவற்றைப் போட்டு, குக்கரில் 4,5 விசில் வரும் வரை வேகவிடவும். இதையும் இரவே செய்து வைத்துக் கொள்ளலாம். காலையில், வெளியில் எடுத்து, எலுமிச்சம் பழம் பிழிந்து, நன்கு கலக்கவும். வெந்த ஜவ்வரிசி கெட்டியாக இருக்கும். அதனால் ரிப்பன் அச்சிலேயே பிழியலாம். வில்லைதான் வேண்டுமென்றால், இன்னும் சிறிது வெந்நீர் கலந்து தளர்த்திக் கொண்டு, பிளாஸ்டிக் ஷீட்டால் சிறு கரண்டியால் தட்டை, தட்டையாக வைக்கலாம். எலுமிச்சம் பழத்துக்குப் பதில், தக்காளிச் சாறெடுத்து, கலந்து செய்யலாம். நிறமும் அழகாக இருக்கும். சுவையும் வேறாக இருக்கும்.

NO COMMENTS

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version