- Ads -
Home சமையல் புதிது ஆரோக்கிய சமையல்: சுரைக்காய் முட்டியா!

ஆரோக்கிய சமையல்: சுரைக்காய் முட்டியா!

Zucchini
Zucchini

சுரைக்காய் முட்டியா

தேவையான பொருட்கள்:
சுரைக்காய்। – 1
கடலை மாவு। – 1 டம்ளர்
கோதுமை மாவு। – 1 குழிக்கரண்டி
அஸ்கா – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்। – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள்। – 1 டேபிள் ஸ்பூன்
தயிர் – 1 டம்ளர்
கொத்துமல்லி। – 1 கப் (பொடியாக நறுக்கியது)
சோடா உப்பு -1 பிஞ்ச்
உப்பு। – தேவைக்கேற்ப
வெள்ளை எள் – 50 கிராம்
எண்ணெய் – தே. அ
கடுகு – 1 டீஸ்பூன்
கருவேப்பிலை – சிறிதளவு

செய்முறை :
சுரைக்காயை தோல்சீவி துருவி வெள்ளைத் துணியில் பிழிந்து கொள்ளவும்.

சுரைக்காய் கடலைமாவு, கோதுமை மாவு, அஸ்கா, மஞ்சள் தூள், தயிர், கொத்து மல்லி, சோடா உப்பு, உப்பு, சிறிது எண்ணெய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை நீளமாக நேந்திரன் பழ அளவு உருட்டிக் கொள்ளவும்.

உருட்டியவற்றை இட்லி பானையில் வைத்து 25 நிமிடம் வேக வைக்கவும். வெந்தவுடன், அதன் மேல் எண்ணெய், கடுகு வெள்ளை எள், கருவேப்பிலை தாளித்துக் கொட்டவும். புதினா, மல்லிச்சட்டினியுடன் பரிமாறவும்.

NO COMMENTS

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version