- Ads -
Home சமையல் புதிது ஆந்திரா ஸ்பெஷல்: பால் தாளிக்கலு!

ஆந்திரா ஸ்பெஷல்: பால் தாளிக்கலு!

pal thalikalu - 2026

பால் தாளிக்கலு
தேவையான பொருட்கள்
பால் – அரை லிட்டர்
பச்சரிசி – ஒரு டம்ளர்
ஜவ்வரிசி – அரை கப்
சர்க்கரை – 5 தேக்கரண்டி
வெல்லம் – கால் கிலோ
முந்திரி -அவரவர் விருப்பம்
ஏலக்காய் பொடி – அரை தேக்கரண்டி

அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். முந்திரியை நெய்யில் வறுத்து எடுத்து கொள்ளவும். வெல்லத்தை பொடித்து வைத்து கொள்ளவும். ஜவ்வரிசியை கழுவி சிறிது நீர் ஊற்றி வைத்துக் கொள்ளவும்.

ஊறிய அரிசியை நீர் வடிக்கும் தட்டில் போட்டு தண்ணீர் வடியும் வரை வைக்கவும். வெல்லத்தை சிறிது நீர் ஊற்றி ஒரு கொதி வரும் வரை அடிப்பில் வைத்து இறக்கவும்.

அரை லிட்டர் பாலில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி காய்ச்சி அதில் ஜவ்வரிசியை வேக வைத்துக் கொள்ளவும்.

அரிசியில் உள்ள நீர் மொத்தம் வடிந்ததும் மிக்சியில் நைசாக மாவாக்கிக் கொள்ளவும்.

மாவில் சிறிது உப்பு போட்டு, வெந்நீர் ஊற்றி சப்பாத்தி மாவு போல பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

அரிசி மாவை சிறு சிறு உருண்டைகளாக செய்துக் கொள்ளவும். எல்லா மாவையும் இது போல செய்து கொள்ளவும்.

ஜவ்வரிசி வெந்ததும் உருட்டி வைத்துள்ள அரிசி மாவை ஒவ்வொன்றாக பாலில் போடவும். சிறிது நேரத்திற்கு கிளற கூடாது. அனைத்தும் வெந்து விட்டதா எனப் பார்க்கவும்.

பாலில் 5 தேக்கரண்டி சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரையும் வரை கிளறி அடுப்பை அணைத்து விடவும். சிறிது நேரம் கழித்து வெல்லப்பாகை ஊற்றி நன்கு கிளறவும். அரிசி மாவு குச்சிகள் எல்லாம் சிறு சிறு துண்டுகளாக உடையுமாறு கிளறிக் கொள்ளவும்

முந்திரி பருப்பு மற்றும் ஏலக்காய் போட்டு பரிமாறவும். சுவையான பால் தாளிக்கலு ரெடி. இவை ஆந்திராவில் விநாயகர் சதுர்த்திக்கு செய்வார்கள்.

NO COMMENTS

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version