- Ads -
Home சமையல் புதிது ஆரோக்கிய சமையல்: சாமை தக்காளி ரைஸ்!

ஆரோக்கிய சமையல்: சாமை தக்காளி ரைஸ்!

samai tomoto rice
samai tomoto rice

சாமை தக்காளி ரைஸ்
தேவையான பொருட்கள்
தக்காளி – 3,
சாமை – 250 கிராம்,
சோம்பு – 1 டீஸ்பூன்,
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
கிராம்பு – 2,
பட்டை – சிறிது,
ஏலக்காய் – 2,
பெரிய வெங்காயம் – 2,
உப்பு – தேவைக்கு,
பச்சைமிளகாய் – 3,
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் – 1/2 டீஸ்பூன்,
புதினா – சிறிது.

செய்முறை

கழுவி சுத்தம் செய்த சாமையை தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்து, குழையாமல் வேகவைத்து வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சைவாசனை போக வதக்கி, சோம்பு, பொடித்த பட்டை, கிராம்பு, ஏலக்காய், புதினா, உப்பு, வெங்காயம், பச்சைமிளகாய், கரம்மசாலாத்தூள், தக்காளியை போட்டு நன்கு வதக்கவும். தக்காளி வதங்கியதும் இறக்கி, வெந்த சாமையை கலந்து பரிமாறவும்.

குறிப்பு: சாமைக்குப் பதில் கம்பு, தினை, குதிரைவாலி, வரகிலும் செய்யலாம்.

NO COMMENTS

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version