- Ads -
Home சமையல் புதிது ஆரோக்கிய சமையல்: தினை அடை!

ஆரோக்கிய சமையல்: தினை அடை!

thinai adai
thinai adai

தினை அடை

தேவையான பொருட்கள்:
தினை – 200 கிராம்,
துவரம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 50 கிராம்,
காய்ந்த மிளகாய் – தேவைக்கேற்ப,
சோம்பு – ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – 2 சிட்டிகை,
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:
தினை, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிட்டுக் களைந்துகொள்ளவும். இதனுடன் காய்ந்த மிளகாய், சோம்பு, உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்துச் சற்றே கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்த மாவில் மஞ்சள்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். தோசைக்கல்லில் மாவை அடைகளாக வார்த்து, எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: மாவில் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் சேர்த்தும் அடை தயாரிக்கலாம்.

NO COMMENTS

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version