விடுகதைகள்:
- கழுநீர் குடிக்காது. புல் மேயாது. ஆனால் பானைக்குப் பால் கொடுக்கும். அது என்ன?
-
கொம்பிருக்கு எருமையல்ல. அம்பாரி இருக்கு யானை அல்ல.
அது என்ன?
3.நூறு பல். ஒரே உதடு. அது என்ன?
- மெல்லிய தூண். ஏற முடியாது. இறங்க முடியாது. அது என்ன?
-
ஐயாவுக்கு எட்டாது. அம்மாவுக்கு எட்டும். அது என்ன?
-
சிவப்பு பழம். அதன் மேல் ஈ கூட மெய்க்காது. அது என்ன?
-
காலில்லை நடக்கும். கண்ணில்லை அழும். அது என்ன?
-
நின்றால் நிற்கும். அமர்ந்தால் சாயும். அது என்ன?
விடைகள் :
1. பனைமரம். 2. நத்தை. 3. மாதுளை. 4. ஊசி. 5. உதடுகள் 6. நெருப்பு 7. மேகம். 8.
நிழல்.