- Ads -
Home உள்ளூர் செய்திகள் மதுரையில்… வாகன அனுமதி தொடர்பான முடிவு தற்காலிகமாக நிறுத்தம்!

மதுரையில்… வாகன அனுமதி தொடர்பான முடிவு தற்காலிகமாக நிறுத்தம்!

madurai shopkeepers1

மதுரை மாவட்டத்தில் வாகன அனுமதி தொடர்பாக எடுக்கப் பட்ட முடிவு தற்காலிகமாக நிறுத்தப் பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுரை படி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் போன்றவை இருப்பிடத்திற்கு அருகில் நியாயமான விலையில் கிடைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

ஆகவே அத்தியாவசிய பொருட்கள் வாங்க விரும்பும் பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள கடைகளுக்கு சென்று வாங்கிக்கொள்ள வேண்டும். அத்தியாவசிய பணிகள் ஈடுபடக் கூடிய அலுவலர்கள், பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் வாகன பயணங்கள் மேற்கொள்ள ஏற்கனவே உள்ள நடைமுறையே பின்பற்றலாம்.

அத்தியாவசிய பணிகளுக்காக ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள அனுமதி தொடரும். மேலும் வாகன அனுமதி தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது … என மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மதுரையில் 25ம் தேதி முதல் QR code அட்டை பெற்ற வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி என்று தெரிவிக்கப் பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மதுரையில் 25ம் தேதி முதல் QR code அட்டை பெற்ற வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட உள்ளது. இதனையடுத்து மற்ற வாகனங்களில் வந்தால் பறிமுதல் செய்யப்படும் என்றும், இது குறித்து தகவல் அறிய 1077, 0452-2547160, 9597176061 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதை அடுத்து இன்று காலை வாகன அனுமதிச்சீட்டு வாங்க பெருமளவிலான கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டது. இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version