- Ads -
Home உள்ளூர் செய்திகள் மத்திய அரசின் உதய் திட்டத்தை ஏற்றுக் கொண்டதால் மின்சார வாரியத்துக்கு கடும் நஷ்டம்!

மத்திய அரசின் உதய் திட்டத்தை ஏற்றுக் கொண்டதால் மின்சார வாரியத்துக்கு கடும் நஷ்டம்!

ops budget

சென்னை: மத்திய அரசின் உதய் திட்டத்தை ஏற்றுக் கொண்டதால் மின்சார வாரியத்துக்கு நஷ்டம் அதிகரித்துள்ளது என்று கூறினார் மாநில நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம்.

தமிழக அரசின் 2018-19 நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப் பட்டது. நிதி நிலை அறிக்கையினை தாக்கல் செய்து பேசினார் துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்.

அப்போது அவர் கூறியவை:

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் 3ம் ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது.

தமிழ்நாடு மின்தொடர் அமைப்பு மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.673 கோடி ஒதுக்கீடு.

நெடுஞ்சாலை துறைக்கு 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.11073 கோடி நிதி ஒதுக்கீடு.

மானிய ஸ்கூட்டர் திட்டத்துக்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை, மதுரை, கோவை, கன்னியாகுமரி மருத்துவக்கல்லூரிகளில் 345 புதிய இடங்கள்

நடப்பாண்டில் ரூ.1,43,962 கோடி கடன் வாங்க முடிவு.

வேலைக்கு செல்லும் இஸ்லாமிய பெண்களுக்காக அரசு நிதியுதவியுடன் மகளிர் விடுதி கட்டப்படும்.

அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு ரூ.250 கோடி மானியமாக வழங்கப்படும்.

வருவாய் துறைக்கு ரூ.6,144.58 கோடி ஒதுக்கீடு.

நியாய விலை கடையில் உணவு மானியத்துக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கீடு.

விவசாயிகளுக்கு கூட்டுறவு நிறுவனம் மூலம் ரூ.8,000 கோடி பயிர்க்கடன்.

புதிய நீதிமன்றங்கள் கட்ட ரூ.1,087 கோடி ஒதுக்கீடு.

மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க ரூ.758 கோடி நிதி ஒதுக்கீடு

முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு வழங்கப்படும் கடன் ரூ.1 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக உயர்வு

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு 1,361.60 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

ஊரக வளர்ச்சித்துறையின் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு.

அம்ருத் திட்ட பணிகள் மேற்கொள்ளப்படாத நகரங்களில் பணிகளை செயல்படுத்த ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார் ஓ.பன்னீர்செல்வம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version