- Ads -
Home உள்ளூர் செய்திகள் திருச்சியில் 212கிலோ கஞ்சா பறிமுதல்; ஆந்திராவை சேர்ந்த 2பேர் கைது..!

திருச்சியில் 212கிலோ கஞ்சா பறிமுதல்; ஆந்திராவை சேர்ந்த 2பேர் கைது..!

kanja

திருச்சியில் 212கிலோ கஞ்சா பறிமுதல்; ஆந்திராவை சேர்ந்த 2பேர் கைது..!

திருச்சி அருகே காரில் கடத்தி வரப்பட்ட 212 கிலேவை போலீசார் பறிமுதல் செய்து இது தொடர்பாக ஆந்திராவை சேர்ந்த இருவரை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள பள்ளிவிடை பாலத்தில் டிஎஸ்பி ராஜசேகர் தலைமையில் போலீசஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை சோதனை செய்தனா். அந்த காரில் தலா 2 கிலோ எடை கொண்ட 106 பண்டல்களில் 212 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீஸார் காரில் இருந்த ஆந்திரா மாநிலம் விஜயவாடா மாவட்டம் கண்ணவரத்தைச் சேர்ந்த பாட்சா மகன் கவுஸ்(24) கிருஷ்ணாவரத்தைச் சேர்ந்த சீனிவாசன் மகன் துக்காராவ்(24) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

இது குறித்து எஸ்.பி.ஜியாவுல்ஹக் செய்தியாளர்களிடம் கூறும்போத கைது செய்யப்பட்டுள்ள 2பேரும் தரகர்களாக செயல்பட்டு உள்ளனர். யாருக்காக கொண்டு வரப்பட்டது. என்பன குறித்த விபரங்கள் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இதன் பின்னனியில் சம்பந்தபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் முக்கிய குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் இவ்வாறு அவா் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version