- Ads -
Home உள்ளூர் செய்திகள் இரண்டு குழந்தைகளை கொன்று தாயும் தற்கொலை முயற்சி…!

இரண்டு குழந்தைகளை கொன்று தாயும் தற்கொலை முயற்சி…!

susied

மதுரவாயலில் கணவர் இறந்த துக்கம் மற்றும் கடன் பிரச்சனை  காரணமாக 2 குழந்தைகளை கொலை செய்து தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரவாயலை அடுத்துள்ள ஆலப்பாக்கம் கணபதி நகர் தாமஸ் தெரு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் குடியிருந்து வந்தவர் சிபிராஜ்.-சைலஜா தம்பதியினர்.

இவர்களுக்கு ஸ்ரீலட்சுமி (வயது 4) ஆதிதேஷ் (வயது 2) என்கிற இரண்டு குழந்தைகள். உள்ளனா்.

சம்பவத்தன்று காலை 8.30 மணிஅளவில் கேரளாவில் இருந்து சிபிராஜின் நண்பர் ஜீனத் ஆலப்பாக்கத்தில் உள்ள சிபிராஜின் வீட்டிற்கு தற்செயலாக வந்துள்ளர்.

சிபிராஜின் வீட்டுக் கதவு உள்பக்கம் பூட்டப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். .

அங்கு படுக்கையறையில் சைலஜா மற்றும் 2 குழந்தைகளும் மயங்கிய நிலையில் உயிருக்கு போரடியபடி கிடந்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஜீனத்

அவர்கள் மூவரையும் சிகிச்சைகாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் குழந்தைகள் இரண்டும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

உயிருக்கு போராடிய சைலஜாவை மட்டும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அனுப்பி வைத்தனர்.

இதனை தொடா்ந்து அங்கு வந்த மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் விசாரணை நடத்தினார்.

விசாரணையில் சைலஜாவின் கணவரான சிபிராஜ் கோயம்பேட்டில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். அவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிபிராஜ் இறந்து விட்டார். சைலஜா சிபிராஜின் இரண்டாவது மனைவியாகும்.

இதனால் மனம் உடைந்து போன நிலையில் இருந்து வந்த சைலஜாவுக்கு கடன் பிரச்சனையும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக குழந்தைகள் இரண்டு பேரையும் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு சைலஜா துாக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக சிபிராஜின் நண்பரான ஜீனத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version