- Ads -
Home News மங்கி & மன்னாரு வழங்கும் அசத்தல் அரட்டை

மங்கி & மன்னாரு வழங்கும் அசத்தல் அரட்டை

monkeymannar1

மங்கி மன்னாரு

அடடே மன்னாரு… என்னப்பா இவ்ளோ சந்தோஷமா வர்றே… என்ன விஷயம்?

அது ஒண்ணுமில்ல மங்கி… நம்ம பயலுக வெஸ்ட் இண்டீஸ வறுத்து எடுத்து வேஸ்ட் இண்டீஸ் ஆக்கிடாங்க பாத்தியா? அதான் சந்தோஷமா வர்றேன்…

யோவ் மன்னாரு… கொஞ்சம் வாயப் பொத்துமய்யா… அன்னிக்கு இந்த ரவிராம்பால் கொடுத்தானே ஒரு சூடு… ஒண்ணா ரெண்டா அஞ்சு சூடு… அதப் பாத்ததுக்குப் பொறகும் உனக்கு சந்தோஷமா? என்ன துள்ளல்.! என்ன ஆக்ரோஷம்? விளையாட்டுல அதெல்லாம் வேணாமா? நம்ம பயலுகளும் சொல்லி வெச்ச மாதிரி கேட்ச் கொடுத்து அவுட் ஆனாங்க…

ஆனா ஜெயிச்சிட்டாங்கள்ல?!

ஏதோ அந்த யுவராஜ் சிங்கு கொடுத்த ரெண்டு கேட்ச்ச கோட்டை விட்டதுனால…! அத மட்டும் பிடிச்சிருந்தாங்களோ.. தெரிஞ்சிருக்கும் சேதி…

ஆனாலும் அவரு நல்லாத்தான வெளயாடினாரு…. அத பாராட்ட மாட்டேங்கிறியே!

யோவ் மன்னாரு… ரன் எடுத்தாருங்கிறது வாஸ்தவம்தான்! ஆனா அவுட் ஆன விதத்தைப் பாக்கலியா நீ! ஒவ்வொருத்தருக்கும் ஒரு வீக்னெஸ் இருக்கற மாதிரி யுவராஜ் சிங்குக்கு ஒரு வீக்னெஸ் இருக்கு! எல்லாரும் ஸ்லிப்ல கேட்ச் கொடுத்து அவுட் ஆவாங்க… ஆனா நம்ம யுவராஜ் சிங்கு பவுலருக்கே கேட்ச் கொடுத்து அவுட் ஆவாரு…. என்னமோ தெரியல… நம்ம ஊரு சின்னப் பசங்க மாதிரி தெருவுல கிரிக்கெட் ஆடி பழகினாரோ… இல்ல…. நெட் பிராக்டீஸ்ல நேரா அடிச்சி பவுலருக்கு கேட்ச் பிராக்டீஸ் கொடுத்தே பழகியிருக்காரோ தெரியல..! அது என்ன எப்ப பாத்தாலும் பேட் நேரா ஸ்ட்ரோக் அடிக்கவே வருதே.. இத மாத்திக்கவே மாட்டாரோ?

நீ சொல்றத பாத்தா சரியாத்தான் இருக்கு மங்கி. ஆனா பெரும்பாலான பேட்ஸ்மேனும் இப்படித்தான வெளயாடறாங்க..?

அப்படிச் சொல்லாத! சச்சின் ஸ்ட்ரைட் ட்ரைவ் அடிப்பாரு… ஆனா பந்து பவுலருக்கு லெப்ட்லயோ ரைட்லயோ தரையோட தரையா போகும். பாக்கவே அட்டகாசமா இருக்குமே!

ஆமா மங்கி! நீ சொல்லும்போதுதான் நெனவுக்கு வருது… அன்னிக்கி சச்சின் செஞ்சுரி போட்டு சென்னைக்கு ஒரு சாதனை பட்டியலைக் கொடுப்பார்னு எல்லாரும் எதிர்பார்த்தாங்க… ஆனா இவரு இப்படி செஞ்சிட்டுப் போவார்னு யாருமே எதிர்பாக்கலை. என்ன இருந்தாலும் டாரென் சமி சொன்ன மாதிரி அவரு ட்ரூ ஜெண்டில்மேன்தான்!

சும்மா ஒளராத மன்னாரு… அதே மாதிரி இந்த விஷயத்துல ரிக்கி பாண்டிங் சொன்னத கவனிச்சியா? அம்யபர் அவுட் கொடுக்காத பட்சத்துல நீ ஏன் முந்திரிக்கொட்டைத் தனமா வெளில போகணும்? பொறகு அவரு எதுக்கு இருக்காரு? அப்ப அம்பயருக்கு நீ என்னத்த மதிப்பு கொடுக்கறேங்கறேன்!

சரி அப்ப என்னதான் செய்யணுங்கிறே! தான் அவுட்டுன்னு தெரிஞ்சும் அழுகுனி ஆட்டம் ஆடச் சொல்றியா?

இல்லை… அம்பயர் அவுட் கொடுத்து ரிக்கி பாண்டிங் மாதிரி களத்துல நின்னு அட்டகாசம் பண்றதும் தப்பு; அம்பயர் அவுட் கொடுக்காத பட்சத்துல தானே களத்தை விட்டு நடையைக் கட்டுறதும் தப்பு. அவுட் கொடுக்காத அம்பயர் மூஞ்சிய எங்க கொண்டுபோய் வெச்சுப்பாரு..?

அப்ப விளையாட்டுல நியாய தர்மம்னு ஒண்ணும் இல்லியா?

ஏன்.. மூணாவது அம்பயர்னு ஒருத்தரு இருக்காரு. அவர்கிட்ட அப்பீல் கேப்பாங்க… அதான் யுடிஆர்எஸ் முறைன்னு ஒன்னு இருக்கே அதச் சொன்னேன்… அப்ப எப்படியும் தெரிஞ்சு அவுட் கொடுப்பாங்க. அத வுட்டுட்டு ஏன் தேவையில்லாம வெளில போகணும்..?

அதான் சச்சின் த கிரேட்னு சொன்னேன்… அவரு மனசுக்கு நியாயமா பட்டதால வெளில போனாரு… எப்படியும் மூணாவது அம்பயர் பாத்துட்டு அவுட் குடுக்கப்போறாரு… அதுக்கு எதுக்கு டயத்த வேஸ்ட் பண்ணனும்னு நினைச்சிருக்கலாம் இல்லயா? அதனால அவுட்டுன்னு மனசுக்குப் பட்டுதுன்னா தானா முன்வந்து வெளில போறதுதான புத்திசாலித்தனம். அதத்தான் அன்னிக்கு அவரு செஞ்சாரு. இத ஒரு முன்னுதாரணமா எடுத்துக்கிட்டு, ஒவ்வொரு பேட்ஸ்மேனும் செஞ்சாங்கன்னா…

ஏன் மூணாவது அம்பயரே தேவையில்லின்னு சொல்லி அவங்க பிழைப்புல மண்ணைப் போடறியா?

அட ஆமாம்… எப்படி சரியா கண்டுபிடிச்சே! என்ன இருந்தாலும் மங்கி மங்கிதான்!

சரி சரி வரப்போற ஆஸ்திரேலியா ஆட்டம் எப்படி இருக்கும்னு நெனக்கிறே!

அதான் பேசிக்கிட்டாங்களே மங்கி! வெஸ்ட் இண்டீஸ் ஆட்டத்துல இந்தியா தோத்துட்டா ஆஸ்திரேலியாவோட மோதுறதைத் தவிர்க்கலாம்னு ரசிகர்கள் பரவலா பேசிக்கிட்டாங்களே! ரசிகர்களுக்கே அவ்வளவு பயம்!

அடப் போய்யா… இப்படியெல்லாம் கணக்கு போட்டா… எல்லாம் பிணக்குதான்! ஒழுங்கா விளையாடச் சொல்லப்பா நம்ம பசங்களை! சரி சரி பிறகு பார்ப்போம்… போய் வா!

ஓகே மங்கி… வெற்றிச் செய்தியோட விரைவில் உன்னை வந்து சந்திக்கிறேன்!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version