- Ads -
Home News மங்கி & மன்னாரு:: ஆஸ்திரேலியாவின் ஆட்டம் ஆட்டம் கண்டுடுச்சே…

மங்கி & மன்னாரு:: ஆஸ்திரேலியாவின் ஆட்டம் ஆட்டம் கண்டுடுச்சே…

Dhinasari Home page

ஹைய்யா ஹைய்யா இன்னா ஆட்டம் இன்னா ஆட்டம்… அப்படியே ஆட்டம் கண்டுட்டுது பாத்தியா…

வாய்யா வா மன்னாரு… என்னா ஆட்டம் கண்டுட்டுது..?

ஆஸ்திரேலியாதான்! இன்னா மெதப்புல இருந்தாங்க..? பாகிஸ்தான் கொடுத்துச்சு முதல் அடி… இப்ப இந்தியா குடுத்துட்டு ஒரே இடி!

ஒரேயடியா சொல்லாத மன்னாரு… இதுனால ஒண்ணும் ஆஸ்திரேலியாவோட கிரிக்கெட் சகாப்தம் முடிவுக்கு வந்துடாதுன்னு பாண்டிங் சொன்னத கவனிச்சியா…

ஆமாம் ஆமாம்… அதுலயும் இன்னொண்ணும் சொல்லியிருக்காரு பாத்தியா! அது என்னவோ எனக்கு வயித்தெரிச்சல்ல சொன்னமாதிரிதான் இருக்கு…

என்னன்னு?

இந்தியா பாகிஸ்தானையும் ஜெயிக்கும். அப்படியே உலகக்கோப்பையும் ஜெயிக்கும்னு ஒரேயடியா அளந்துவிட்டுருக்காரே!

ஏம்பா தோத்ததுக்கு அப்புறம் ஏதோ உசுப்பேத்தி விடுறாருன்னு விட்டுடுவியா… இதப்போயி பேசிக்கிட்டு…!

இருந்தாலும் மங்கி.. எல்லாரும் யுவராஜப் போட்டு  அந்தத் தூக்கு தூக்குறாங்க… எனக்கு என்னமோ அவரு ஆட்டத்துல அப்படி ஒண்ணும் ஸ்டைல் இருக்கறாமாதிரி தெரியல… ஒண்ணு ஒண்ணா சேக்கிறதுக்கு என்னமா திணறிட்டிருந்தாரு… அதுவும்… ரொம்ப பயந்துக்கிட்டே ஆடினா மாதிரி இருந்துச்சு…

ஆமாம்.. விக்கெட் போயிடக்கூடாதுன்னு ஜாக்கிரதை இருக்கலாம் இல்லயா?

இல்ல மங்கி… யுவராஜுக்கு ஃபுட் ஒர்க் அப்படின்னு சொல்றதெல்லாம் சரியா வரல்லை… அவரு பாட்டுக்கு இருந்த இடத்துல இருந்துக்கிட்டு, அதுவும் கால ரெண்டும் எப்படி நிலத்துல ஊன்றிக்கிட்டு நிக்கிறாரோ அப்படியே நின்னுக்கிட்டு பந்து பேட்டுக்கு அடிக்க வர்றாமாதிரி வந்தாதான் அடிக்கிறாரோன்னு தோணுது எனக்கு…!

கரெக்டுதான்… ஆனா, அதுவும் ஒரு ஜாக்கிரதை உணர்வுதான்… ஆனா ரெய்னா இதுக்கு எவ்வளவோ பரவாயில்லை. எனக்கு தெரிஞ்சு தோனி செஞ்ச நல்ல காரியம்… ரெய்னாவையும் அஸ்வினையும் டீமுக்கு எடுத்ததுதான்னு சொல்லுவேன்..

சரிதான் மங்கி.. அஸ்வின் எடுத்த முதல் விக்கெட் ஒரு டர்னிங் பாயிண்டு.. அதே மாதிரி முதல் பத்து ஓவர்கள்ல அதிகமா ரன் எடுக்க வுடாம நல்லா காப்பாத்துறாருன்னு சொல்லு…

ஆமாம்… முதல் 10 ஓவர்கள்லயே சுழற்பந்துக்கு தயார்படுத்துறது நல்லதுதான்… இதே மாதிரிதான் அப்ரிடியும் அதிரடியா பந்துவீசறாரு. அவரும் இதேமாதிரி ஸ்லோ பிட்சுக்கு ஏத்ததுபோல் முதல்லயே சுழற்பந்து வீச்சைக் கொண்டுவந்துடறாரே… அதுவும் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரா அவரு காட்டின டகல்டி வேலையெல்லாம் பாத்தியானா நீயும் சொல்லுவே…

ஆனா… இந்தியாவோட இந்த ஆட்டம் எடுபடுமான்னு பாக்கணும்… நீ என்ன சொல்லுறே… இந்தியாவா பாகிஸ்தானா..?

திரும்பத் திரும்ப இப்படி கேக்காதே… ரசிகர்களுக்குதான் இந்த விறுவிறுப்பு குறுகுறுப்பு எதிர்பார்ப்பு எல்லாம்… ஆனா ரெண்டு டீமும் அப்படியேதான் இருக்காங்க.. ஓவர் டென்ஷன் இருக்கும்னாலும் பாகிஸ்தான் டீம் முந்தி மாதிரி ஆக்ரோஷமா இல்லன்னுதான் தோணுது…

எப்டி சொல்றே…

இம்ரான், வாசிம், மியாந்தத் அப்புறம்…. இன்சமாம் காலத்துல இருந்த மாதிரி எல்லாம் டீம் இப்ப இல்லைன்னு தோணுது… பழக்கப்பட்ட மண்ணுங்கிறதால நல்லா ஆடிட்டிருக்காங்க…

சரி சரி… ஆனா இதுவரைக்கும் இந்தியா உலகக்கோப்பை போட்டிகள்ல பாகிஸ்தான்கிட்ட தோத்ததே இல்லைன்னு ஒரு சரித்திரம் இருக்கே… அது அப்படியே நிலைக்குமான்னு எனக்கு ஒரே கவலையா இருக்கு… அத நெனச்சா சோறுதண்ணி எறங்கமாட்டேங்கி…

அதுக்கு நீ ஏன் கவலைப்படுறே… போய் வேலையைப் பாரு.. பசங்க வேற எக்ஸாமுக்கு படிச்சிக்கிட்டிருப்பாங்க… அதுபாட்டுக்கு அது… நம்மபாட்டுக்கு நாம… என்ன சரியா?

சரி சரி போய் வர்றேன்…

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version