- Ads -
Home அரசியல் சாமிதோப்பு தலைமை பதிக்குள் விதிமுறைகளை மீறி உதயநிதி செல்வதா?- பொன்.ரா கண்டனம் ..

சாமிதோப்பு தலைமை பதிக்குள் விதிமுறைகளை மீறி உதயநிதி செல்வதா?- பொன்.ரா கண்டனம் ..

images 2022 11 24T124653.709

கன்னியாகுமரி மாவட்டம் சாமி தோப்பில் அமைந்துள்ள அய்யா வைகுண்டரின் தலைமைப்பதி அய்யாவை உணர்ந்த அனைத்து தரப்பு மக்களுக்கும் புனித தலமாகும். அய்யாவின் பதிக்குள் சென்று வழிபட விரும்புவோர் ஆண்களுக்கு உண்டான விதிமுறைகளை கட்டாய விதிமுறைகளை கடைபிடித்தாக வேண்டும்.இந்த நிலையில் சாமிதோப்பு தலைமை பதிக்குள் விதிமுறைகளை மீறி செல்வதா?-எனஉதயநிதிக்கு பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்

பாரதிய ஜனதாவைச் சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கன்னியாகுமரி மாவட்டம் சாமி தோப்பில் அமைந்துள்ள அய்யா வைகுண்டரின் தலைமைப்பதி அய்யாவை உணர்ந்த அனைத்து தரப்பு மக்களுக்கும் புனித தலமாகும்.

அய்யாவின் பதிக்குள் சென்று வழிபட விரும்புவோர் ஆண்களுக்கு உண்டான விதிமுறைகளான மேலாடை தவிர்த்தல், தலையில் தலைப்பாகை அணிதல், நெற்றியில் திருநாமம் இடல் போன்ற கட்டாய விதிமுறைகளை கடைபிடித்தாகவேண்டும். தி.மு.க. இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை தி.மு.க.வின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைவரும், நாகர்கோவில் மேயருமான மகேஷ், சாமிதோப்பு தலைமை பதிக்குள் அழைத்து சென்றுள்ளார்.

உடன் சென்ற அமைச்சர்கள் மனோ தங்கராஜ், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மேலாடையின்றி, தலைப்பாகை அணிந்து சென்றுள்ளனர். ஆனால் அய்யாவை அவமதிக்கும் வகையில், அவர் வகுத்து வைத்த விதிமுறைகளை வேண்டுமென்றே மீறும் வகையில் உதயநிதி ஸ்டாலினும், மகேசும் செயல்பட்டுள்ளனர்.

உதயநிதிஸ்டாலின், மகேஷ் ஆகியோர் தாங்கள் செய்த தவறுக்கு அய்யாவை வணங்கி பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். மேலும், அவர்களை பதியின் சார்பில் உள்ளே அழைத்து சென்ற முதன்மை குரு பால ஜனாதிபதி தாம் வகிக்கும் பொறுப்பை துறக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version