- Ads -
Home Reporters Diary கருணாநிதியைக் கண்டுகொண்டு… காமராஜரை கைகழுவிச் சென்ற… காங்கிரஸ் தலைவர்கள்!

கருணாநிதியைக் கண்டுகொண்டு… காமராஜரை கைகழுவிச் சென்ற… காங்கிரஸ் தலைவர்கள்!

IMG 20181216 WA0034

கருணாநிதி சிலைத் திறப்பு விழா முடிந்த பிறகு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ராயப்பேட்டையில் இருந்து காரில் புறப்பட்டனர்.

அவர்கள் சென்ற கார் காந்தி மண்டபம் கடந்து, காமராஜர் நினைவிடம் வழியாக சென்றது. அப்போது ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் காமராஜர் நினைவிடத்தில் காத்திருந்தனர்.

அவர்கள் செல்லும் வழியில், காமராஜர் நினைவிடம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது! ராகுலையும் சோனியாவையும் வரவேற்று மாலை அணிவிக்க காங்கிரஸ் தொண்டர்கள் பெரும் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் ராகுல் காந்தி சோனியா காந்தி ஆகியோர் சென்ற கார் காமராஜர் நினைவிடத்தில் நிற்காமலேயே் சென்றது.

இதனால் ஏமாற்றமடைந்த காங்கிரஸ் தொண்டர்கள் இது குறித்து அதிருப்தி அடைந்திருப்பதாக ஊடக வட்டாரங்களில் பேசப்பட்டது.

இது கராத்தே தியாகராஜன் ஏற்பாடாம்! எனவேதான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தற்போதைய தலைவர் திருநாவுக்கரசர் சோனியா காந்தி ராகுல் காந்தியிடம் இது பற்றிக் கூறவில்லை என்கிறார்கள்!

கராத்தே தியாகராஜன், ரஜினி ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ்காரர்களின் ஒற்றுமை மனோபாவத்தை பறைசாற்றுவதாக இந்த நிகழ்வு அமைந்துவிட்டதாகப் பேசுகிறார்கள் ஊடக வட்டாரத்தில்!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version