தமிழகத்தில் பல கோடி பேர் வேலை இல்லாமல் திண்டாடி வருகின்றனர். மாநில அரசு அதிகமாக பாலின் விலையை உயர்த்துவது என்பது சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் பலபேர் சிறைக் கைதிகளாக உள்ளனர். மக்களுக்காக பாடுபட கூடிய அரசியல் கட்சி தலைவர்களை எல்லாம் சிறையில் வைத்து விட்டு காஷ்மீரில் என்ன சீர்திருத்தத்தை செய்யப் போகிறார்கள். மத்திய அரசு அமைப்புகளால் அறிவிக்கப்படும் வேலை வாய்ப்புக்களாக இருக்கட்டும், தமிழகத்தில் இருக்கக்கூடிய நிறுவன வேலை வாய்ப்புக்களாக இருக்கட்டும், தமிழ்நாட்டில் இருக்கக் கூடியவர்களுக்கு வேலை கிடைப்பது கிடையாது.