- Ads -
Home அடடே... அப்படியா? திருப்பூரில் டவுன் பஸ் விட்டபோது குதிரை வண்டிக்காரர்கள் வேலையிழப்பார்கள்னு போராட்டம் நடத்தியவர்கள்!

திருப்பூரில் டவுன் பஸ் விட்டபோது குதிரை வண்டிக்காரர்கள் வேலையிழப்பார்கள்னு போராட்டம் நடத்தியவர்கள்!

hraja
file pic

பொதுத்துறை வங்கிகள் இணைப்பு அறிவிப்பை கண்டித்து வங்கி ஊழியர்கள் நாளை நாடு தழுவிய போராட்டம் நடத்தப் போவதாக, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாசலம் கூறியுள்ளார்.

நாட்டில் பொதுத்துறை வங்கிகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து, வங்கி நடவடிக்கைகளை சீர்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதனை அறிவித்தார்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கம்யூனிஸ்ட் இடது சாரி தொழிற் சங்கங்கள், இன்று நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளன.

இது குறித்து தனது கருத்தைப் பதிவு செய்துள்ள பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா, திருப்பூரில் டவுன் பஸ் விட்டபோது குதிரை வண்டி ஓட்டுபவர்கள் வேலை இழந்துவிடுவார்கள் என்று கூறி சாலைமறியல் செய்தவர்கள் தானே இவர்கள் என்று விமர்சித்துள்ளார்.

அவரது கருத்துப் பதிவு… : வங்கிகள் இணைப்பு: 27 பொதுத்துறை வங்கிகள் 12 ஆக இணைப்பது உள்ளிட்ட பல சீர்திருத்தங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை இடதுசாரிகள் எதிர்த்துள்ளனர். இதில் ஆச்சரியம் இல்லை. திருப்பூரில் டவுன் பஸ் விட்டபோது குதிரை வண்டி ஓட்டுபவர்கள் வேலை இழப்பார்கள் என்று கூறி சாலைமறியல் செய்தவர்கள்.

2 COMMENTS

  1. கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்ணுக்கு தெரிந்த நன்மையையே தீமையாக இருக்குமோ என்று தடுமாறவைக்கும் சாமர்த்தியசாலிகள். ஆனால் காலம் அவர்களை காட்டிக் கொடுத்து விடுகிறதே.

  2. ஆமாம், கம்யூனிஸ்ட்களுக்கு தெரிந்ததே எதற்கெடுத்தாலும் போராட்டம், போராட்டம்தான். நல்ல விஷயங்களை மறைத்து, மக்களை குழப்பி அதில் பொழப்பு நடத்துவதே இவர்களின் வழக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version