- Ads -
Home சற்றுமுன் மாலை போட மறுத்த மணமகள்.. மண்டியிட்டு கெஞ்சிய மணமகன்!

மாலை போட மறுத்த மணமகள்.. மண்டியிட்டு கெஞ்சிய மணமகன்!

marriage 9

பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமணங்களின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன.

தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

திருமணங்களில் பல வித சடங்குகள் நடக்கின்றன. இந்த சடங்குகளின் போது பல வித வேடிக்கையான நிகழ்வுகளையும் நாம் காண முடிகின்றது.

இவற்றில் சில சம்பவங்கள் மணமக்கள் மற்றும் விருந்தினர்களின் மனதில் அப்படியே நின்றுவிடுவதுண்டு. இவற்றை அவர்கள் மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்து சிரிப்பதுண்டு. அப்படி ஒரு வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

இந்திய திருமணங்கள் வேடிக்கையான சடங்குகளாலும் நிகழ்வுகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மணமகன் மணமகள் இடையில் நடக்கும் குறும்புகளுக்கும் இதில் குறைவு இருப்பதில்லை.

மாலை மாற்றும் சடங்கின் போது நடக்கும் வேடிக்கைகளுக்கும் பஞ்சமே இல்லை. தற்போதும் திருமணம் தொடர்பான ஒரு வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

வைரலாகி வரும் இந்த திருமண வீடியோவில், மாலை மாற்றும் சடங்குக்கு மணமக்கள் தயாரகி வருகிறார்கள். இவர்களது அருகில் இருவரது உறவினர்களும் உள்ளனர்.

முதலில் மணமளுக்கு மாலை போட மணமகன் தயாராகிறார். ஆனால் மணப்பெண்ணுக்கு மாலை அணிவிக்க மனமகன் சென்றவுடன் அவர் அதை ஏற்க மறுத்து விடுகிறார்.

மீண்டும் மீண்டும் மணமகன் மாலை அணிவிக்க முயற்சித்தாலும், அவரால் முடியவில்லை.

இதனால் கடுப்பான மணமகன் சோஃபாவில் அமர்ந்து விடுகிறார். என்ன செய்தால் மணமகள் தனது மாலையை ஏற்றுக்கொள்வார் என அவர் யோசிக்கிறார்.

பின்னர், அவருக்கு ஒரு யோசனை வருகிறது. ஒரு முடிவு எடுத்தவரை போல, மணமகன் மணமகளின் முன் மண்டியிட்டு காதல் பாணியில் அவரிடம் தனது மாலையை ஏற்றுக்கொள்ளும்படி கேட்கிறார்.

மணமகனின் இந்த அன்பான அணுகுமுறை மணமகளை உருக வைக்கிறது. அவர் வெட்கத்தல சிவந்து புன்னகை பூக்கிறார்.

மணமகன் மணமகளை தனது மாலையை ஏற்றுக்கொள்ள அணுகிய முறை உறவினர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி மகிழ்வித்தது.

இந்த வீடியோ bridal_lehenga_design என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்குகளும் வியூஸ்களும் கிடைத்துள்ளன.

நெட்டிசன்களுக்கும் மணமகனின் பாணியும் குறும்பும் மிகவும் பிடித்திருக்கிறது. இந்த வீடியோவுக்கு பல வித கமெண்டுகளும் வந்த வண்ணம் உள்ளன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version