- Ads -
Home சுய முன்னேற்றம் புருஷ லட்சணம்ன்னா என்ன தெரியுமா?1

புருஷ லட்சணம்ன்னா என்ன தெரியுமா?1

thought provoking - 2026

உத்யோகம் புருஷ லக்ஷணம் என சொல்வார்கள்.

ஆனால் உத்யோகத்தை தவிர்த்து மேலும் பல முக்கிய குணங்களையும் ஒரு கணவன் கொண்டிருக்க வேண்டும் என்பது மகாபாரதத்தின் உத்யோக பர்வத்தில் விளக்கப்படுகின்றது.

நல்ல கணவனிடம் கட்டாயம் இருக்கவேண்டிய 10 பண்புகள்:

1) அக்கறை – மனைவி, பிள்ளை(கள்) மற்றும் குடும்பத்தாரின் மீது முழுமையான அக்கறை கொள்தல்.

2) தானம் – தம்மால் இயன்றதை தேவைபடுவோருக்கு கொடுத்து உதவும் மனப்பான்மை.

3) இனிமை – மனைவியிடம் எப்போதும் இனிமையாக பேசவும், மென்மையாக நடந்தும் கொள்தல்.

4) நல்வாக்கு – எவரிடமும் நன்மையானவற்றை மட்டுமே பேசுதல்.

5) மரியாதை – மனைவி என்பவள் மதிப்பிற்குரியவள் மற்றும் மரியாதைக்குரியவள் என்பதை உணர்ந்து நடந்து கொள்தல்

6) மதிப்பு – தாய், தந்தை, மாமனார் மற்றும் மாமியார் ஆகியோரிடம் மரியாதையுடனும் மதிப்புடனும் நடந்து கொள்தல்.

7) அன்பு – மனைவியின் உடன்பிறந்தவர்களிடம் அன்போடு நடந்து கொள்தல்.

8) இன்முகம் – விருந்தினர்களை இன்முகத்துடன் வரவேற்றல்.

9) பக்தி – இறைபக்தி கொண்டிருத்தல், தெய்வங்களை வணங்குதல் மற்றும் ஞான நூல்களைக் கற்றல்.

10) பாதுகாப்பு – குடும்பத்தினரை எந்தவொரு ஆபத்திலிருந்தும் பாதுகாப்பாகவும் முன்னெச்சரிக்கையுடனும் வைத்திருத்தல்.

நல்ல கணவன் கொண்டிருக்கக் கூடாத 5 பண்புகள்:

1) பிறனில் விழைதல் – தம் மனைவியைத் தவிர மற்றொரு பெண்ணிடம் தகாத உறவு வைத்துக் கொள்ளக் கூடாது.

2) புறம்பேசுதல் – எவரிடமும் தம் மனைவி, பிள்ளை(கள்) மற்றும் குடும்பத்தார் பற்றி தகாதவற்றை பேசக் கூடாது. மற்ற குடும்பத்தாரைப் பற்றியும் தகாதவற்றைப் பேசக் கூடாது.

3) பொறாமை – மற்றவர்களின் மனைவி, பிள்ளை(கள்) மற்றும் குடும்பத்தார் மீது பொறாமை கொள்ளக் கூடாது.

4) கோபம் – எந்தவொரு சமயத்திலும் (மனிதனின் ஆறு எதிர்களில் ஒன்றான) கோபத்தின் வசப்பட்டு குடும்பத்தாரிடம் கடுமையாக நடந்து கொள்ள கூடாது.

5) கடமை மறத்தல் – எந்தவொரு சமயத்திலும் தன் மனைவிக்கு, பிள்ளைகளுக்கு மற்றும் குடும்பத்தாருக்கு ஆற்றவேண்டிய கடமைகளை மறக்க கூடாது.

முதலில் கூறப்பட்டுள்ள பத்து பண்புகளில் எத்தனை உங்களிடம் உள்ளது? கீழே கூறப்பட்டுள்ள ஐந்து கூடாத பண்புகளில் ஏதேனும் உங்களிடம் உள்ளதா?

அப்படி இருந்தால் இன்றே அதை தவிர்த்து விடுங்கள். ஒரு நல்ல கணவனாக உங்களின் தர்மத்தை மீறாமல் வாழ்வதே தங்கள் வாழ்க்கையின் முதல் முக்கியமாகும்.

  • பாமரன்

NO COMMENTS

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version