- Ads -
Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் இறைவனே நம் எல்லோருடைய புகலிடம்! ஆச்சார்யாள் அருளமுதம்!

இறைவனே நம் எல்லோருடைய புகலிடம்! ஆச்சார்யாள் அருளமுதம்!

abinav vidhya theerthar

இறைவனே நம் எல்லோருடைய புகலிடம் தர்ம மார்க்கத்தில் செல்வதற்கான பேருதவியை ஒருவன் இறைவனிடத்திலிருந்து தான் பெறமுடியும். எல்லாம் வல்லவராக எல்லாம் அறிந்தவராக திகழும் இறைவன் தர்மத்தை ஆதரிப்பதும் எடுத்துரைப்பதிலும் சிறந்து விளங்குகிறார். அவரிடத்தில் வைக்கும் பக்திதான் மிகவும் முக்கியம். நாம் பார்க்காவிட்டால் கூட இறைவன் இருக்கிறார் என்ற உண்மையை அறிதல் வேண்டும்.

காற்று உட்பட கண்ணுக்கு தெரியாதது எதையும் நம்ப மறுத்தான் ஒரு சிறுவன் அவனது தந்தை காற்றில் அசையும் மரத்தின் இலைகளை காண்பித்து நீ நம்ப மறுக்கும் காற்றின் அசைவினைப் பார் என்று கூறினார்.

நீங்கள் இலைகளை தான் காட்டுகிறீர்கள் காற்றை அல்ல காற்றை எங்கிருக்கிறது என்று வாதாடினான் தந்தை அவனது மூக்கின் இரு துவாரங்களையும் தமது கையால் அழுத்தி மூடிவிட்டார்.

மூச்சுத்திணறி அவன் தன்னை விடுவிக்குமாறு துடித்தான் சில வினாடிகள் கழித்து தந்தை அவனை விடுவித்தார் என் மூச்சை தடுக்கிறீர்கள் என்று அவன் கேட்டு கோபித்துக் கொண்டான்.

நீ மூச்சாக உள்வாங்கிக்கொள்ள நினைத்தாயே அது என்ன அதுதான் காற்று என்று கூறுகிறார் தந்தை கடைசியில் அவன் ஒப்புக்கொண்டான் ஒரு பொருள் கண்ணிற்குப் புலப்படாத காரணத்தால் மட்டுமே இல்லை என்று எல்லா சமயத்திலும் கூறிவிட முடியாது காற்றைப் போல இறைவன் நம் கண்ணிற்குப் புலப்படுவதில்லை நிச்சயம் அவர் இருக்கிறார். காற்றை சுட்சமாக அறிவது போல் இறைவனையும் சுட்சமாக உணரலாம். இது போல்தான் மின்சாரம், நம் உடலில் தோன்றும் வலி ஆகியவற்றை காட்ட முடியாது உணரத்தான் முடியும். மின்சாரம் ஒரு வகை கண்ணாடி அணிந்தால் காணலாமே என வாதிடுவர் அதே போல் உண்மை தரமம் ஞானம் பக்தி போன்ற கண்ணாடி மூலமாக இறைவனைக் காண முடியும்.

அண்ட சராசரங்களை படைத்து காத்து அழித்து இறைவன் தான். இறைவன் மிகப்பெரிய இந்திரஜாலகாரன்

ஒரு இந்திர ஜால வித்தைக்காரர் மிகவும் பிரபலமான இந்திய கயிற்று வித்தையைக் பிறர் முன்னிலையில் செய்து காட்டினான் கயிற்றை வானில் தூக்கி எறிந்த அவன் அதைப் பிடித்துக் கொண்டு மேலே ஏறி அப்படியே மாயமாய் மறைந்து விட்டான் அங்கே கூடியிருந்தவர்கள் அவனைப் பார்க்க முடியாவிட்டாலும் யாரோ இருவர் சண்டை போட்டுக்கொள்ளும் ஒலியை மட்டும் அவர்களால் கேட்க முடிந்தது.

பிறகு துண்டு துண்டுகளாக அவனது உடம்பு கீழே விழுவதை அவர்கள் பார்த்தார்கள் சிறிது நேரத்திற்குப் பின் அவன் எந்தவித காயமும் இன்றி குதுகலத்துடன் தோன்றினான். திகைத்து நின்ற கூட்டத்தை பார்த்து அவன் இதெல்லாம் என்னுடைய இந்திரஜால சக்தியால் நடந்ததாகவும் நான் ஒருவன் தான் உண்மையில் இருந்தேன் என்று தெளிவுபடுத்தினான்

சில நாத்திகர்கள் ஒரு பானையை செய்ய வேண்டுமானால் அதற்கு குயவன் தயார் செய்து கொள்ள ஒரு இடம், மண் சக்கரம் போன்ற உபகரணங்கள் தேவை இறைவன் தான் இந்த பிரபஞ்சத்தையும் படைத்தார் என்றால் அவர் படைத்து இருக்கவே முடியாது ஏனெனில் பிரபஞ்ச சிருஷ்டிக்கு முன் பிரபஞ்சத்தை உருவாக்குவதற்கான மூலப்பொருட்களும் மூலப்பொருட்களை கையாளுவதற்கான உபகரணங்களும் இறைவன் உட்கார்ந்துகொண்டு சிஷ்டிக்க ஒரு இடம் இல்லாத போது அவரால் எப்படி உலகத்தை சிருஷ்டிக்க முடிந்தது என்று கேள்வி எழுப்புவார்கள்

இதனை ஒப்புக்கொள்ள முடியாது இந்திரஜால வித்தைக்காரன் தான் நின்று கொண்டிருந்த இடத்தை விட்டு சிறிதும் நகரவில்லை இருந்தும் அக்கூட்டத்தை அவன் வசப்படுத்தியதாலோ என்னவோ அவர்கள் பிரமிப்புடன் அக்காட்சியைக் கண்டு ரசித்தார்கள்

ஜாலத்திர்கெல்லாம் பெரிய இந்திரஜாலக்காரன் இறைவன் எவ்வித மூலப்பொருட்களும் உபகரணங்களும் அமர்ந்து கொள்ள இடமும் தேவையின்றி தம்முடைய மாயா சக்தியைக் கொண்டே இவ்வுலகத்தை நமக்கு தோற்றுவிக்கிறார்

ஒரு சாதாரண மனிதன் வீடுகளுடன் தார் சாலைகள் உடன் கூடிய கனவு உலகத்தை அதற்குத் தேவையான செங்கற்களை ஆதாரம் இல்லாமல் தன் கனவில் தோன்ற செய்ய முடிகிறது என்றால் பொருட்கள் ஏதுமின்றி இறைவன் இவ்வுலகைப் படைக்கும் சக்தியில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

என்று ஆச்சார்யாள் இறைவனின் பெருமையை அறிவுறுத்துகிறார்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version