- Ads -
Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் இறைவன் எங்கு இருக்கிறான்? ஆச்சார்யாள் அருளமுதம்!

இறைவன் எங்கு இருக்கிறான்? ஆச்சார்யாள் அருளமுதம்!

abinav vidhya theerthar

பாண்டவர்களில் மூத்தவரான யுதிஷ்ட்ரர் கௌரவர்களுடன் சூதாட்டம் விளையாடுவதற்கு முடிவு செய்து விளையாடுகிறார். அதில் நேரம் செல்ல செல்ல பொருட்கள் எல்லாம் இழந்து கொண்டே வந்தார் தம்பி படை நாடு என அத்தனையையும் இழந்து தன்னையும் இழந்து திரௌபதியும் இழந்தார்

அந்த கூட்டத்தில் துரியோதனன் ஆணையின் பேரில் திரௌபதியை சபைக்கு அழைத்து வரப்பட்டாள் அவளை அவமானப் படுத்துவதற்காக துச்சாதனன் அவளது ஆடையை களைய ஆரம்பித்தான் தன்னைக் காப்பாற்றுமாறு எதிரே நின்று கொண்டிருந்த அத்தனை பேரிடமும் கெஞ்சினாள்

அதனைப் பார்த்த அவையோர்கள் அனைவருமே உள்ளம் துடித்தாலும் அவளுக்கு உதவிக்கரம் நீட்ட முடியாத சூழ்நிலையில் இருந்தார்கள்

இறைவன் ஒருவரால்தான் தன்னைக் காக்க முடியும் என்று உணர்ந்தவள் கிருஷ்ணா துவாரகாபுரிஸ்வரா எங்கே இருக்கிறாய் நீ வந்து என் மானத்தை காப்பாற்று என்று பிரார்த்தித்தாள்

சில வினாடிகள் கழித்துதான் இறைவன் உதவிக்கு வந்தார் திரௌபதியும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீண்டு வெளியே வந்த பிறகு காப்பதற்காக ஏன் அவர் உடனடியாக வராமல் தாமதமாக வந்தார் என்று கிருஷ்ணரை உரிமையோடு கேட்டாள்

அதற்கு கிருஷ்ணர் துவாரகையில் இருப்பவனே என்று தானே கூப்பிட்டாய் துவாரையிலிருந்து அஸ்தினாபுரம் வருவதற்கு நேரம் எடுக்காதா? நீ என்னை ஹிருதய கமலவாசா என்று ஏன் கூப்பிடவில்லை அதனால் நான் எதிரில் வந்து உன்னைக் காப்பாற்ற சில வினாடிகள் பிடித்தது துவாரகையிலிருந்து நான் வரவேண்டும் அல்லவா? நீ ஹ்ருதய கமலவாசா என் இதயதாமரையில் இருப்பவனே என்று அழைத்திருந்தால் உதவிக்கு உடனடியாக வந்து இருப்பேன் என்றார்.

மகாபாரதத்தில் வரும் இந்நிகழ்ச்சி இறைவன் நம் அருகிலேயே உள்ளார் என்று உண்மையை மறப்பது நமக்கு தீமை விளைவிக்கும் என்று நமக்கு எடுத்துரைக்கிறது எங்கேயோ வெகு தொலைவில் உள்ள விலாசத்தில் இறைவன் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் உள்ளே இருந்துகொண்டு நமக்கு அருள் செய்து கொண்டிருப்பதை மக்கள் அறிவில்லை

அவர்தான் அந்தர்யாமி அல்லது உள்ளே ஆள்பவர் என்று அழைக்கப்படுகிறார் அவர்தான் அவனுடைய ஆத்மா என்று பிரஹதாரண்யக உபநிஷத்தில் இறைவனைப் பற்றி நமக்கு சொல்லிக் கொடுக்கிறது. அதனால் அந்தர்யாமியாக விளங்குகின்ற இறைவனை நாம் அறிய வேண்டும் என்றும் அவர் நம்முடன் இருப்பதை உணர்ந்து நம் செயல் சிறந்து தர்மத்தின் வழி நடக்க வேண்டும் என்று ஜேஸ்ட மகாசன்னிதானம் அருளுரையில் உரைக்கிறார்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version