- Ads -
Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் காஞ்சி வரதராஜ பெருமாள் கருட சேவை: பக்தர்கள் ஆயிரக்கணக்கில் தரிசனம்

காஞ்சி வரதராஜ பெருமாள் கருட சேவை: பக்தர்கள் ஆயிரக்கணக்கில் தரிசனம்

kanchi varatha garudasevai1

வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று கருட உத்ஸவ சேவை நடைபெற்றது. இன்று காலை வரதராஜ பெருமாள் கோவிலில்  கருட வாகன சேவை  சிறப்பாக நடைபெற்றது

காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவிலில் பிரமோத்ஸவம் நேற்று முன் தினம் தகொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோத்ஸவத்தின் இந்தப் பத்து நாள் உத்ஸவங்களில் கருட சேவை, தேரோட்டம், தீர்த்தவாரி ஆகியவை வெகு விமர்சையாக நடைபெறும்.

வெளி மாநில பக்தர்களும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான அளவில் காஞ்சிபுரத்திற்கு பக்தர்கள் வந்துள்ளனர். இந்நிலையில் கருட சேவை உத்ஸவம் வெகுச் இறப்பாக இன்று காலை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கருட சேவையை தரிசிக்க வந்ததால், 400க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

1 COMMENT

  1. இன்று அதனால் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது என்ற தகவலையும் சேர்த்து வழங்கி இருக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version