- Ads -
Home விளையாட்டு காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதலில் இந்தியாவுக்கு 2-வது தங்கம் .. பிரதமர் வாழ்த்து..

காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதலில் இந்தியாவுக்கு 2-வது தங்கம் .. பிரதமர் வாழ்த்து..

500x300 1739034 common wealth123

காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதலில் இந்தியாவுக்கு 2-வது தங்கம் கிடைத்துள்ளது.

காமன்வெல்த் போட்டியின் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் ஜெரிமி தங்கம் வென்றார். ஆண்களுக்கான 67 கிலோ எடைப்பிரிவில் 300 கிலோ எடையை தூக்கி இந்தியாவின் ஜெரேமி லால்ரின்னுங்கா முதலிடம் பெற்று தங்கம் வென்றார். பெண்கள் பிரிவில் மீராபாய் சானு ஏற்கனவே தங்கப்பதக்கம் வென்றுள்ள நிலையில், ஜெரிமி இரண்டாவது தங்கம் வென்றுள்ளார். இந்நிலையில், காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற ஜெரேமி லால்ரினுங்காவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில், ” நமது யுவசக்தி சரித்திரம் படைத்து வருகிறது! ஜெரேமி ல்ரினுங்காவுக்கு வாழ்த்துக்கள். அவர் தனது முதல் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் மற்றும் ஒரு அற்புதமான சாதனையையும் படைத்துள்ளார். இளம் வயதிலேயே அவர் மகத்தான பெருமையையும், புகழையும் கொண்டு வந்துள்ளார். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டிருந்தார்.

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இரண்டாம் நாளில் பளுதூக்குதல் போட்டி நடைபெற்றது. இந்நிலையில், பளு தூக்குதலில் 55 கிலோ எடைப்பிரிவில் 202 கிலோ எடையை தூக்கி இரண்டாமிடம் பிடித்தார் பிந்த்யாராணி. இதையடுத்து, அவர் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் காமன்வெல்த் பளுதூக்குதலில் இந்தியா ஒரே நாளில் 1 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என 4 பதக்கங்களை வென்றுள்ளது.

காமன்வெல்த் போட்டியில் இந்திய பளுதூக்கும் வீராங்கனை பிந்த்யாராணி தேவி வெள்ளிப் பதக்கம் வென்றதற்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பர்மிங்காமில் காமல்வெல்த் போட்டியில் 55 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக பிந்த்யாராணி தேவிக்கு வாழ்த்துகள். இந்த சாதனை அவரது விடாமுயற்சியின் வெளிப்பாடாகும், மேலும் இது ஒவ்வொரு இந்தியருக்கும் மிகவும் மகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது. அவரது எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல், 55 கிலோ எடைப் பிரிவு பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சங்கேத் சர்காருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது அபாரமான முயற்சியால் மதிப்புமிக்க வெள்ளியை வெல்வது காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு ஒரு சிறந்த தொடக்கமாகும். அவருக்கு வாழ்த்துக்கள் மற்றும் அனைத்து எதிர்கால முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

இதேபோல் 61 கிலோ எடைப்பிரிவு பளுதூக்கும் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய வீரர் பி. குருராஜாவிற்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது விளையாட்டுப் பயணத்தில் மேலும் பல மைல்கல் சாதனைகள் படைக்க வாழ்த்துவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version