Tag: தெரிவித்து

  • வேலூரில் நடிகர் ரஜினிக்கு கண்டனம் தெரிவித்து உருவ பொம்மை எரிப்பு

    வேலூர் மாவட்டம் நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி கலவரம் மற்றும் துப்பாக்கிச்சூடு பற்றி கூறிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் வலுக்கிறது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு டவுன் 4 கம்பம் பகுதியில் ரஜினிகாந்தின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழினம் மறு மலர்ச்சி கழக அமைப்பினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, ரஜினிகாந்த்தின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தி கோ‌ஷம் எழுப்பினர். அங்கு வந்த பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் அப்பாசாமி மற்றும் போலீசார், ரஜினியின் உருவபொம்மையை…

  • அதிமுகவில் மீண்டும் இணைந்தார் : குண்டுகல்யாணம்

    தென் சென்னை வடக்கு மாவட்டம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த நடிகர் குண்டு கல்யாணம் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, தன்னை மீண்டும் கழகத்தில் இணைத்துகொள்ள வேண்டி கேட்டு கொண்டதால், இன்றுமுதல் கழகத்தில் இணைந்து பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார் என்று அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுகவின் கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் சென்னை வடக்கு மாவட்டம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி…

  • தூத்துக்குடியில் போலீசார் துப்பாக்கி சூட்டிற்கு கண்டனம் தெரிவித்து சேலத்தில் சாலை மறியல்

    தூத்துக்குடியில் போலீசார் துப்பாக்கி சூட்டிற்கு கண்டனம் தெரிவித்து சேலத்தில் சாலை மறியல் நடத்தியுள்ளனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு செல்ல முயன்ற பொதுமக்கள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேருக்கு குண்டு காயம் அடைந்துள்ளனர். 5 பேரில் ஒருவர் நிலைமை கவலைக்கிடம் என தகவல் வெளியாகியுள்ளது. போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு…